Jio Offer : 1 ஆண்டுக்கு இலவச ரீசார்ஜ்.. ஜியோ நிறுவனம் அசத்தல் அறிவிப்பு.. முழு விவரம் இதோ!
New Offer | இழந்த தங்களின் பயனர்களை தன்வசம் திருப்பும் விதமாக, பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் ஜியோ நிறுவனமும் பல சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் திட்டங்களை அறிவித்து வருகிறது.
ஜியோவின் புதிய பிளான் : சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ப்ரீ பெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் பிளான்களின் விலையை அதிரடியாக உயர்த்தின. எதிர்பாரத விதமாக விலை உயர்த்தப்பட்டதால் பயனர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஜியோ நிறுவனம் ரீச்சார்ஜ் பிளான்களின் விலையை உயர்த்தியது மட்டுமன்றி, 5ஜி சேவையை பயன்படுத்தவும் கட்டுப்பாடுகளை விதித்தது. ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்த பயனர்களை இது கோபமூட்டும் விதமாக அமைந்தது. இதன் காரணமாக ஏராளமான பயனர்கள் தங்களின் மொபைல் எண்ணை, அரசாங்கத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL-க்கு மாற்ற தொடங்கினர். இந்நிலையில் இழந்த தங்களின் பயனர்களை தன்வசம் திருப்பும் விதமாக, பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் ஜியோ நிறுவனமும் பல சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் திட்டங்களை அறிவித்து வருகிறது.
இதையும் படிங்க : Zomato : சில்லறை இல்லனா இனி கவலை வேண்டாம்.. அசத்தல் அம்சத்தை அறிமுகப்படுத்திய சொமேட்டோ!
ஃபிரீடம் ஆஃபரை மேலும் சில நாட்களுக்கு நீட்டித்த ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஃபிரீடம் ஆஃபரை மேலும் சில நாட்களுக்கு நீட்டித்த கையோடு, புதிய சலுகை ஒன்றையும் அறிவித்துள்ளது. அது என்ன புதிய சலுகை, அதில் யாரெலலாம் பயன்பெறலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரூ.3,599 மதிப்பிலான வருடாந்திர திட்டம் முற்றிலும் இலவசம்
ரிலையன்ஸ் ஜியோவின் அந்த புதிய சலுகை ஒரு விளம்பர சலுகை ஆகும். இந்த சலுகை ஜியோ ஏர்ஃபைபர் சேவையின் கீழ் இணைப்பை பெறும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதுமட்டுமன்றி இந்த சிறப்பு சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. சுதந்திர தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட ஃப்ரீடம் சேல் மூலம் ஏர்ஃபைபர் சேவையை பெறும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.3,599 மதிப்புள்ள வருடாந்திர மொபைல் திட்டம் முற்றிலும் இலவசமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Aadhaar & PAN : வாட்ஸ்அப்பில் ஆதார் மற்றும் பான் கார்டு டவுன்லோட் பண்ணலாமா.. அட இது தெரியாம போச்சே!
ஜியோவின் மேலும் சில சிறப்பு தள்ளுபடிகள்
தகவலின்படி, ஜியோ ஏர்ஃபைபர் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.3,599 வருடாந்திர மொபைல் திட்டம் இலவசமாக கிடைக்கும். இந்த திட்டத்துடன் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 30% தள்ளுபடியும் கிடைக்கும். அதன்படி, 30% தள்ளுபடிக்கு பிறகு ரூ.2,121-க்கு 3 மாத திட்டம் கிடைக்கும். அதுமட்டுமன்றி ரூ.1,000 மதிப்புள்ள இலவச இன்ஸ்டாலேஷனும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.