5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Jio Mobile Recharge : கூடுதல் கட்டணம் செலுத்தாமல் ஜியோ ரீச்சார்ஜ் செய்வது எப்படி.. இத கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

Recharge Fees | சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ப்ரீ பெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் பிளான்களின் விலையை அதிரடியாக உயர்த்தின. எதிர்பாரத விதமாக விலை உயர்த்தப்பட்டதால் பயனர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஜியோ நிறுவனம் ரீச்சார்ஜ் பிளான்களின் விலையை உயர்த்தியது மட்டுமன்றி, 5ஜி சேவையை பயன்படுத்தவும் கட்டுப்பாடுகளை விதித்தது.

Jio Mobile Recharge : கூடுதல் கட்டணம் செலுத்தாமல் ஜியோ ரீச்சார்ஜ் செய்வது எப்படி.. இத கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!
ஜியோ (Photo Credit : Kabir Jhangiani/NurPhoto via Getty Images)
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 13 Sep 2024 23:59 PM

மொபைல் ரீச்சார்ஜ் கட்டணம் : தற்போது கூகுள் பே, போன் பே உள்ளிட்ட யுபிஐ செயலிகளை பயன்படுத்தி ரீச்சார்ஜ் செய்யும்போது ரீச்சார்ஜ் கட்டணமாக ரூ.3 பிடித்தம் செய்யபப்டுகிறது. ஒருவேளை நீங்கள் இந்த கட்டணத்தை தவிர்க்க வேண்டு  என்றால் அதை சுலபமாக செய்யலாம். கீழ்கண்ட இந்த நடைமுறைகளை பின்பற்றி நீங்கள் ஜியோ ரீச்சார்ஜ் செய்வதன் மூலம் உங்களால் ரீச்சார்ஜுக்கு பிடித்தம் செய்யப்படும் கட்டணத்தை தவிர்க்க முடியும். அதை எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Realme P2 Pro : இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி பி2 ப்ரோ.. விலை மற்றும் சிறப்பு அமங்கள் என்ன.. முழு விவரம் இதோ!

கட்டணம் செலுத்தாமல் ஜியோ சிம்-க்கு ரீச்சார்ஜ் செய்வது எப்படி?

  1. முதலில் ப்ளேஸ்டோரில் ஜியோ நிறுவனத்தின் பிரத்யேக செயலியான MyJio செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  2. பிறகு உங்கள் மொபைல் எண்ணை பயன்படுத்தி லாக் இன் செய்துக்கொள்ளுங்கள்.
  3. இதன் பிறகு உங்களுக்கு திரையில் ரீச்சார் செய்வதற்கான தேர்வுகள் தோன்றும்.
  4. அதில் இருந்து உங்களுக்கு தேவையான ரீச்சார்ஜ் பிளானை தேர்வு செய்துக்கொள்ளுங்கள்.
  5. சரியான பிளானை தேர்வு செய்ததற்கு பிறகு, Proceed to payment என்பதை கிளிக் செய்யுங்கள்.
  6. இப்போது Pay via UPI ID என்பதை கிளிக் செய்யுங்கள்.
  7. இதனை தொடர்ந்து உங்கள் கூகுள் பே அல்லது போன் பே உள்ளிட்ட எந்த யுபிஐ அடியை நீங்கள் உள்ளிட்டீர்களோ அந்த செயலிக்கு சென்று எந்த வித கட்டணமும் இல்லாமல் ரீச்சார்ஜ் செய்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : Apple 16 Series : இன்று தொடங்குகிறது ஆப்பிள் 16 சீரீஸ் ப்ரீ புக்கிங்.. எப்படி ஆர்டர் செய்வது.. முழு விவரம் இதோ!

இதுவே நீங்கள் நேரடியாக யுபிஐ செயலி மூலம் ரீச்சார் செய்தீர்கள் என்றால் உங்களிடம் இருந்து கட்டணம் பிடித்தம் செய்யப்படும். இதுவே நீங்கள் ஜியோ செயலி மூலம் யுபிஐ பயன்படுத்து ரீச்சார்ஜ் செய்தீர்கள் என்றால் உங்களிடம் தேவையற்ற கட்டணம் வசூலிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Google Pay Scam : கூகுள் பே, போன் பே பயன்படுத்துறீங்களா உஷார்.. புதுவித மோசடி குறித்து எச்சரிக்கும் சைபர் கிரைம் காவல்துறை!

ப்ரீ பெய்டு ரீச்சார்ஜ் பிளான்களின் விலையை உயர்த்திய ஜியோ

சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ப்ரீ பெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் பிளான்களின் விலையை அதிரடியாக உயர்த்தின. எதிர்பாரத விதமாக விலை உயர்த்தப்பட்டதால் பயனர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஜியோ நிறுவனம் ரீச்சார்ஜ் பிளான்களின் விலையை உயர்த்தியது மட்டுமன்றி, 5ஜி சேவையை பயன்படுத்தவும் கட்டுப்பாடுகளை விதித்தது. ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்த பயனர்களை இது கோபமூட்டும் விதமாக அமைந்தது. இதன் காரணமாக ஏராளமான பயனர்கள் தங்களின் மொபைல் எண்ணை, அரசாங்கத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL-க்கு மாற்ற தொடங்கினர். இந்நிலையில் இழந்த தங்களின் பயனர்களை தன்வசம் திருப்பும் விதமாக, பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் ஜியோ நிறுவனமும் பல்வேறு சேவைகள் மற்றும் திட்டங்களை அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Apple Airpod 4 : தலையை அசைத்தால் மட்டும் போதும்.. Call Attend செய்யலாம்.. ஆப்பிள் ஏர்பாட்ஸ் 4-ன் அசத்தல் அம்சங்கள்!

வெறும் ரூ.198-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோவின் புதிய திட்டம்

ஜியோவின் இந்த புதிய திட்டம் வெறும் ரூ.198-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தினசரி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி 100 எஸ்.எம்.எஸ்கள் உட்பட அன்லிமிடெட் 5ஜி சேவையும் வழங்கப்படுகிறது.

Latest News