Helpline Number: டிஜிட்டல் மோசடி உஷார்.. இந்த நம்பரை உடனே சேமிச்சுக்கோங்க!
டிஜிட்டல் மோசடி : டிஜிட்டல் இந்தியாவாக மாறி வரும் இந்தியாவில் ஆன்லைன் மோசடிகள் மற்றும் பிற மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சைபர் கிரைம் செய்பவர்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்ற தந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். சாமானிய மக்களை ஏமாற்ற வலை விரிக்கிறார்கள். அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் சில நிமிடங்களில் காணாமல் போய்விடும்.
சைபர் கிரைம் : தகவல் பரிமாற்றத்துக்கு மட்டுமே போன் என்ற கதையெல்லாம் இப்போது மாறிவிட்டது. கையில் இருக்கும் ஸ்மார்ட்போனில் பணப்பரிவர்த்தனை முதல் வங்கி பரிவர்த்தனை வரை பணம், முதலீடு, வருமானம் சார்ந்த பல விசயங்கள் உள்ளன. வெளியில் செல்லும்போது கையில் பணம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை போன் இருந்தால் எந்த செலவையில் சமாளிக்கலாம் என்ற நிலை வந்துவிட்டது. இந்தியா டிஜிட்டல் யுகத்தை நோக்கி வேகமாக நகர்கிறது. இப்போதெல்லாம் பல வேலைகள் வீட்டிலிருந்தே செய்யக் கிடைக்கின்றன. வங்கி தொடர்பான பல பணிகள் மற்றும் முன்பதிவுகள் இப்போது வீட்டிலிருந்தே செய்யப்படுகின்றன.
ஆன்லைனில் பணப் பரிமாற்றம் செய்தாலும் அல்லது புதிய கணக்கைத் தொடங்கினாலும், வங்கி தொடர்பான பல பணிகள் இப்போது வேகமாக முடிக்கப்படுகின்றன. இதற்காக வங்கிக்கு செல்ல வேண்டியதில்லை. இப்படி டிஜிட்டல் உலகம் பெரிய உதவியாக இருந்தாலும் அதே டிஜிட்டலில் சிக்கலும் இருக்கின்றன
டிஜிட்டல் மோசடியின் தாக்கம்
டிஜிட்டல் இந்தியாவாக மாறி வரும் இந்தியாவில் ஆன்லைன் மோசடிகள் மற்றும் பிற மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சைபர் கிரைம் செய்பவர்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்ற தந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். சாமானிய மக்களை ஏமாற்ற வலை விரிக்கிறார்கள். அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் சில நிமிடங்களில் காணாமல் போய்விடும். சைபர் மோசடி என்பது சாமானியர்களுக்கு மட்டுமின்றி அரசுக்கும் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. ஆன்லைன் மோசடியை தடுக்க மத்திய அரசு முதல் மாநில அரசு, ரிசர்வ் வங்கி, உங்கள் வங்கி என அனைவரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்
1930
சைபர் மோசடி சம்பவங்களை வைத்துப் பார்த்தால் சிறு நகரங்கள், கிராம மக்கள் மட்டுமின்றி பெரிய அதிகாரிகள், பெரிய தலைவர்கள், நிர்வாக அதிகாரிகள், காவல்துறையினரும் இந்தச் சிக்கலில் ஈடுபடுவது தெரிகிறது. அவர்களை ஏமாற்றும் திட்டம் சற்று வித்தியாசமானது. இந்த மோசடி செய்பவர்கள் குறித்து மக்களை எச்சரிக்கவும், அவர்களை உடனடியாகக் கண்காணிக்கவும் மத்திய உள்துறை அமைச்சகம் ஹெல்ப்லைன் எண்ணை வழங்கியுள்ளது. சைபர் கிரைம் வழக்கில் மக்கள் 1930 என்ற எண்ணுக்கு டயல் செய்யலாம் என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.
உங்களது செல்போனில் இருந்து ஏதேனும் பணம் திருடப்பட்டாலும், ஏதேனும் சைபர் குற்றங்களில் நீங்கள் சிக்கப்பட்டாலும் உடனடியாக இந்த எண்ணை தொடர்புகொண்டு புகாரளிக்கலாம்.ஆன்லைன் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு உதவி பெற இந்த எண் 1930 ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணை உங்கள் மொபைலில் சேமிக்கவும். எப்போது வேண்டுமானாலும் அந்த எண்ணில் புகார் செய்யலாம். ஏதேனும் மோசடி நடந்தால் இந்த எண்ணில் புகார் செய்து உதவி பெறலாம்.