Crime: லிஃப்ட் கேட்டு சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள்
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயது பெண் கடந்த செப்டம்பர் 3 ஆம்தேதி தனது மகளை பார்க்கச் செல்ல பேருந்து நிலையத்தில் இரவு காத்திருந்துள்ளார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் ராயந்துரைச் சேர்ந்த பிரவீன் மற்றும் ராஜ்கபூர் என்று இரு இளைஞர்கள் வந்துள்ளனர். பேருந்து நிறுத்தத்தில் தனியாக இருந்த அந்த பெண்ணிடம் லிப்ட் கொடுப்பதாக கூறியுள்ளனர். முதலில் அப்பெண் வர மறுத்ததாக சொல்லப்படுகிறது.
பாலியல் வன்கொடுமை: தஞ்சாவூர் மாவட்டத்தில் லிப்ட் கேட்டு சென்ற பெண்ணை இரு இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயது பெண் கடந்த செப்டம்பர் 3 ஆம்தேதி தனது மகளை பார்க்கச் செல்ல பேருந்து நிலையத்தில் இரவு காத்திருந்துள்ளார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் ராயந்துரைச் சேர்ந்த பிரவீன் மற்றும் ராஜ்கபூர் என்று இரு இளைஞர்கள் வந்துள்ளனர். பேருந்து நிறுத்தத்தில் தனியாக இருந்த அந்த பெண்ணிடம் லிப்ட் கொடுப்பதாக கூறியுள்ளனர். முதலில் அப்பெண் வர மறுத்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் பேருந்து வர நீண்ட நேரமாகும் என்றும், தாங்கள் அந்த பகுதியை தாண்டி தான் செல்வதாகவும் கூறியுள்ளனர்.
Also Read: ஆன்மீகம் பெயரில் அரசுப் பள்ளியில் சர்ச்சை பேச்சு – பள்ளிக்கல்வித்துறை போட்ட கண்டிஷன்!
இரவு வெகு நேரம் ஆகிவிட்ட நிலையில் அவர்களின் உதவியை பெரிதாக எண்ணிய அந்தப் பெண்ணும் உடன் வர சம்மதித்துள்ளார். அவர் பிரவீன் அமர்ந்து இந்த பைக்கில் உட்கார்ந்து பயணம் மேற்கொண்டுள்ளார். பின்னால் மற்றொரு பைக்கில் ராஜ்கபூர் வந்துள்ளார். இப்படியான நிலையில் இருவரும் ஊரை தாண்டியதும் ஆள் இல்லாத வயல் பகுதிக்கு அப்பெண்ணை அழைத்துச் சென்றுள்ளனர். தான் தவறான வழியில் செல்வதையும், நிலைமை தவறாக இருப்பதையும் உணர்ந்த பெண் உதவிக்கேட்டு கூச்சலிட்டுள்ளார். இதனால் பயந்து போன பிரவீன் ராஜ்கபூர் இருவரும் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் இருவரும் மாறி, மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதற்கிடையில் தனது வீட்டிற்கு வருவதாக சொன்ன அம்மா நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை என்பதால் சந்தேகமடைந்த அப்பெண்ணின் மகள் தனது தம்பியை விட்டு தேடி வரச் சொல்லி உள்ளார். அதன்படி தம்பியும் தேடிக் கொண்டு வரும்போது வழியில் அம்மா அழுது கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அந்த பெண்ணின் மகன் வருவதைப் பார்த்ததும் பிரவீன், ராஜ்குமார் இருவரும் தப்பியோடி விட்டனர்.
Also Read: Uttar Pradesh: உ.பி.,யில் அசைவம் கொண்டு வந்த மாணவன்.. சஸ்பெண்ட் செய்த பள்ளி முதல்வர்!
வீட்டிற்கு சென்ற அந்த பெண் நடந்தவற்றை குடும்பத்தினரிடம் தெரிவிக்க அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் அக்கம் பக்கத்தினருக்கும் தெரிய வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே பாதிக்கப்பட்ட அப்பெண் தஞ்சாவூர் போலீசாரிடம் பிரவீன் மற்றும் ராஜ்குமார் மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார். இந்நிலையில் இருவரையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் போலீசார் தங்களை கைது செய்ய வருவதை அறிந்து தப்பி ஓடிய போது தவறி விழுந்ததாக ஒருவருக்கு கையிலும் மற்றவர்களுக்கு காலிலும் முறிவு ஏற்பட்டுள்ளது