5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Alimony Case: ”விவாகரத்து பெறும் வரை ஜீவனாம்சம் தந்து தான் ஆகணும்” சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

முஸ்லிம் திருமண முறிவு சட்டத்தில் விவாகரத்து வழக்கு முடியும் வரை ஜீவனாம்சம் வழங்குவதற்கு உரிய பிரிவுகள் இல்லை என்றாலும், அரசியலமைப்பு அளித்துள்ள உரிமையின் அடிப்படையில் மனைவி மற்றும் குழந்தைக்கு ஜீவனாம்சம் தர வேண்டும்  என்று சென்னை உயர்நீதிமன்ற லட்சுமிநாராயணன் உத்தரவிட்டார். மேலும், மனைவிக்கு மாதம் 30 ஆயிரம் ரூபாய் இடைக்கால ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்ற ஊட்டி குடும்பநல நீதிமன்றத்தின் உத்தரவு சரிதான் என்றும்  கூறினார்.

Alimony Case: ”விவாகரத்து பெறும் வரை ஜீவனாம்சம் தந்து தான் ஆகணும்” சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
சென்னை உயர்நீதிமன்றம்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 05 Sep 2024 10:52 AM

சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு: முஸ்லிம் திருமண முறிவு சட்டத்தில் விவாகரத்து வழக்கு முடியும் வரை மனைவி மற்றும் குழந்தைக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என தனி சட்டப்பிரிவு இல்லாவிட்டாலும், அரசியலமைப்பு உரிமையின்படி மனைவி மற்றும் குழந்தைக்கு ஜீவனாம்சம் வழங்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊட்டியை சேர்ந்த இஸ்லாமியப் பெண், விவாகரத்து கோரி ஊட்டி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது இடைக்கால ஜீவனாம்சம் வழங்க கோரி அப்பெண் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், மாதம் 30 ஆயிரம் ரூபாய் இடைக்கால ஜீவனாம்சமாக வழங்க கணவருக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கணவர் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமிநாராயணன் விசாரித்தார்.

விசாரணை முடிவில், முஸ்லிம் திருமண முறிவு சட்டத்தில் விவாகரத்து வழக்கு முடியும் வரை ஜீவனாம்சம் வழங்குவதற்கு உரிய பிரிவுகள் இல்லை என்றாலும், அரசியலமைப்பு அளித்துள்ள உரிமையின் அடிப்படையில் மனைவி மற்றும் குழந்தைக்கு ஜீவனாம்சம் தர வேண்டும்  என்று உத்தரவிட்டார்.  மேலும், மனைவிக்கு மாதம் 30 ஆயிரம் ரூபாய் இடைக்கால ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்ற ஊட்டி குடும்பநல நீதிமன்றத்தின் உத்தரவு சரிதான் என்றும்  கூறினார். இதனை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற லட்சுமிநாராயணன் உத்தரவிட்டார்.

Also Read: காலாவதியான சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல்.. அமைச்சர் எ.வ. வேலு அதிர்ச்சி தகவல்

அன்றே சொன்ன உச்ச நீதிமன்றம்:

விவாகரத்தான இஸ்லாமிய பெண்களுக்கு ஜீவனாம்சம் வழங்குவது நீண்ட காலமாக சர்ச்சைக்குரிய விவகாரமாக உள்ளது. அண்மையில் ஜீவனாம்சம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்திருந்தது. குற்றவியல் சட்டம் 125-வது பிரிவு எல்லா ஒரு இஸ்லாமியப் பெண் தனது கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 124 அனைத்து பெண்களுக்கும் பொருந்தும்.

ஜீவனாம்சம் கூறுபவர் எந்த மதத்தவராக இருந்தாலும் அனைத்து பெண்களுக்கும் இது பொருந்தும்.  இதில் ஜீவனாம்சம் என்பது அவர்களுக்கு தொண்டு செய்வது அல்ல. இந்த உரிமையானது மத எல்லைகளை கடந்து அனைத்து திருமணமான பெண்களுக்கும் பாலின சமத்துவம் மற்றும் நிதிப் பாதுகாப்பு கொள்கையை வலுப்படுத்துகிறது” என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

Also Read: திருமணத்தை மீறிய உறவு.. குடியிருந்த வீட்டுக்கு தீவைத்த ஐபிஎஸ் அதிகாரி

1985ஆம் ஆண்டு ஷாபானு ஜீவனாம்சம் வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. குற்றவியல் சட்டம் 125ஆவது பிரிவு இஸ்லாமிய பெண்களுக்கும் பொருந்தும் என்பது தான் அந்த தீர்ப்பின் சாராம்சம் ஆகும். இந்த நிலையில், அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு 1986ல் சட்டத்திருத்தம் கொண்டு வந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News