பிறந்தநாள் கொண்டாட்டம்.. திடீரென மயங்கி விழுந்த விஜயகாந்த் மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
Birthday Celebration | விஜயகாந்தின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு தேமுதிக அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் பங்கேற்க தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்தின் மகன்கள் விஜயபிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியனும் தொடண்டர்களை சந்தித்தனர்.
விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம் : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தேமுதிகவின் நிறுவனருமான விஜயகாந்தின் 72 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவர் கடந்த ஆண்டு உடல்நல குறைவால் உயிரிழந்த நிலையில் அவரது 72வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் அவரதி பிறந்தநாளை முன்னிட்டு அங்கு அவரது சிலையும் திறக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Vijayakanth Birthday: மறைவுக்குபின் முதல் பிறந்தநாள்..! விஜயகாந்தின் கல்வி முதல் மறைவு வரை.. முழு விவரம் இங்கே!
விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாட்ட கூட்ட நெரிசலில் மயங்கிய சண்முகபாண்டியன்
விஜயகாந்தின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு தேமுதிக அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் பங்கேற்க தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்தின் மகன்கள் விஜயபிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியனும் தொடண்டர்களை சந்தித்தனர். அப்போது அங்கு கூடிய கூட்ட நெரிசல் காரணமாக விஜயகாந்தின் இரண்டாவது மகன் சண்முகபாண்டியன் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சண்முகபாண்டியன்
சண்முகபாண்டியன் திடீரென மயங்கி விழுந்ததை கண்டு பதரிப்போன தொண்டர்கள், அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் கூட்ட நெரிசல் காரணமாக சண்முகபாண்டியன் மயங்கி விழுந்திருக்கலாம் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
பிறந்தநாளின் போது தொண்டர்களை சந்தித்து வந்த விஜயகாந்த்
விஜயகாந்த் ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளன்று தனது தொண்டர்கள் மற்றும் ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த ஆண்டு அவர் உயிரிழந்த நிலையில், விஜயகாந்தின் குடும்பத்தினர் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுடன் இணைந்து பிறந்த நாள் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்தின் 72வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அவரது சிலையை அமைக்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக திட்டமிடப்பட்டு வந்தது. அந்த வகையில் அவரது பிறந்தநாளான இன்று காலை தேமுதிக அலுவலகத்தில் அவரது சிலை நிறுவ பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Vijayakanth Birthday: கேப்டன் பிறந்தநாள்.. வெறும் 71 நிமிடங்கள்… விஜயகாந்த் முகத்தை டாட்டூ போட்ட 71 தொண்டர்கள்!
விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு டாட்டூ போட்டுக்கொண்ட 71 பேர்
விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி தொண்டர்கள் 71 பேர் அவரது முகத்தை கையில் டாட்டூ போட்டுக் கொண்டுள்ளனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. விஜயகாந்த் பிறந்து 71 ஆண்டுகள் இன்று நிறைவடைவதை ஒட்டி 71 நபர்களுக்கு டாட்டூ போட்டு உலக சாதனை நிகழ்வு நடந்தது. இதில் தொடர்கள் 71 பேருக்கு 71 நிமிடங்களில் 71 கலைஞர்கள் டாட்டூ போட்டுள்ளனர்.