5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Today’s Top News Headlines: காலை முதல் தற்போது வரை நடந்தது என்ன? இன்றைய டாப் 10 செய்திகள்..

உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Today’s Top News Headlines: காலை முதல் தற்போது வரை நடந்தது என்ன? இன்றைய டாப் 10 செய்திகள்..
இன்றைய டாப் 10 செய்திகள்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 04 Jul 2024 21:16 PM

தமிழ்நாடு:

  • இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தகவல். ஜூலை 8 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என எதிர்ப்பார்ப்பு
  • அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் 9 பேர் கைது, உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்
  • சேலம் அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் சடம் ஒழுங்கு சீர்க்கேட்டை சரி செய்ய திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி கண்டனம்
  • மக்களுடன் முதல்வர் திட்டம்: சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு
  • மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வரும் 10 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
  • திருச்சியில் காசு கொடுக்காமல் வேர்கடலை வாங்கிய சிறப்பு உதவி ஆய்வாளர், சஸ்பெண்ட் செய்த ஆணையர் காமினி

Also Read: மீண்டும் முதலமைச்சராக பதவியேற்ற ஹேமந்த் சோரன்.. ஜார்க்கண்ட் அரசியலில் ட்விஸ்ட்..!

இந்தியா:

  • மும்பை கடற்கரை சாலையில் வெற்றிக் கோப்பையுடன் இந்திய கிரிக்கெட் அணி பேரணி. கொட்டும் மழையிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் வழிநெடுகிலும் உற்சாகம்
  • 17 ஆண்டுகளுக்கு பின் டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணி. நாடு திரும்பிய வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வாழ்த்து தெரிவித்தார்
  • மீண்டும் 3வது முறையாக ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன். நேற்று சாம்பாய் சோரன் ராஜினாமா ராஜினாமா செய்த நிலையில் இன்று பதவியேற்பு
  • உத்திர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் ஆன்மீக நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஹத்ராஸ் சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கிறார்.
  • பிரதமர் மோடியுடன் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சந்திப்பு. அம்மாநில பிரச்சனை தொடர்பாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • அரசு முறை பயணமாக பிரதமர் மோடி ஆஸ்திரியா மற்றும் ரஷ்யா செல்கிறார். வரும் 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்

உலகம்:

  • அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக எண்ணம் இல்லை என ஜோ பைடன் திட்டவட்டம். கமலா ஹாரிஸுக்கு வாய்ப்பு அதிகம் என கருத்துக்கள் வந்த நிலையில் பைடன் தகவல்
  • இஸ்ரேல் ஹமாஸ் போர்: உயிரிழந்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 38 ஆயிரம் கடந்தது
  • பிரிட்டனில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு.. மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவாரா ரிஷி சுனக்

விளையாட்டு:

  • டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி வீரர்கள் மும்பையில் வெற்றி பேரணி, கொட்டும் மழையிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் வழிநெடுகிலும் உற்சாகம்
  • விம்பிலள்டன் டென்னில் போட்டி: ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் அலெக்ஸ் டி மினார் 3வது சுற்றுக்கு தகுதி
  • விம்பிலள்டன் டென்னில் போட்டி: கோகோ காப் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

Also Read: நிரந்தரமாக மூடப்படும் “கூ”.. நிதி நெருக்கடி தான் காரணம் என நிறுவனர்கள் விளக்கம்!

Latest News