Today’s Top News Headlines: ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா.. இன்றைய முக்கியச் செய்திகள்..
இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.
முக்கியச் செய்திகள்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 – 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் நேற்று முதல் இன்று வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழ்நாடு:
- தமிழ் புதல்வன் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று கோவை அரசு கல்லூரியில் தொடங்கி வைக்கிறார்.
- போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து இம்மாத இறுதியில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
- சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மாலை 4.00 மணிக்கு மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதான வழக்கறிஞர் அருள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
- மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 – 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தியா:
- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் இந்திய ரிமோட் சென்சிங் நிறுவனம் (ஐஐஆர்எஸ்) இணைந்து செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் மெஷின் லேர்னிங் (எம்எல்) குறித்த 5 நாள் ஆன்லைன் படிப்புக்கான ஆன்லைன் பதிவு செயல்முறையைத் தொடங்கியுள்ளன.
- இஸ்லாமியர்களின் சமூக மற்றும் பொருளாதார நலன்களுக்கான வக்பு வாரியங்களின் அதிகாரங்களை குறைக்க வழிவகை செய்யும் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
- பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற ஆடவர் ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Also Read: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. காங்கிரஸ் கட்சி நிர்வாகி கைது..
உலகம்:
- கல்வி என்பது தேசம் மற்றும் சமூகத்தை மாற்றுவதற்கான ஒரு கருவி என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நியூசிலாந்தில் தெரிவித்துள்ளார்.
- வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுடன் தொடர்பில் உள்ளதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் பிப்ரவரி மாதம் 2025 ஆம் ஆண்டு தான் பூமிக்கு திரும்ப முடியும் என நாசா தகவல் தெரிவித்துள்ளது.
- அமெரிக்காவின் உதவியின்றி ஹமாஸ் தலைவர் படுகொலை சாத்தியமில்லை என ஈரான் தெரிவித்துள்ளது
விளையாட்டு:
நேற்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.