5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Today’s Top News Headlines: வங்கதேச பிரதமர் இந்தியாவில் தஞ்சம்.. இன்றைய முக்கியச் செய்திகள்..

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Today’s Top News Headlines: வங்கதேச பிரதமர் இந்தியாவில் தஞ்சம்.. இன்றைய முக்கியச் செய்திகள்..
இன்றைய முக்கியச் செய்திகள்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 06 Aug 2024 07:03 AM

முக்கியச் செய்திகள்:  தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று 5 மாவட்டங்களில் கனமழை இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் நிலமை நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் சூழலில், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துள்ளார். மேலும் நேற்று முதல் இன்று வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழ்நாடு :

  •  தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
  • தமிழக மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை விடுவிக்க கோரி தமிழ்நாடு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று மத்திய அமைச்சர் ஜெயசங்கரை சந்திக்கிறார்.
  • கட்சி ஆர்பாட்டத்தின்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறு பாடல் பாடிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஐபிஎஸ், எஸ்பி, டிசி வேலை குறித்தும் அவதூறாக பேசிய நிலையில், திருச்சி மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் வருண் குமாரும் சீமானுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
  • சென்னையில் வரும் 15ஆம் தேதி சுதந்தர தினவிழா சென்னை ஜார்ஜ் கோட்டையில் நடைபெற உள்ளது. இதையொட்டி சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுகிறது.  இதையொட்டி சென்னையில் 9.13 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • பட்டதாரி  ஆசிரியர்களின் கோரிக்கை ஏற்று அரசு பணி நியமண ஆணை வழங்க வேண்டும்  என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
  • பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, கே.கே.நகர், தியாகராய நகர், அண்ணாநகர், அம்பத்தூர், திருவான்மியூர், சோழிங்கநல்லூர், பட்டாபிராம், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மிந்தடை செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: ‘மழை பிடிக்காத மனிதன்’ பட பிரச்சினை ஓவர் – விஜய் ஆண்டனி!

இந்தியா:

  • வங்கதேசத்தில் போராட்டக்காரர்களிடன் ஆட்சியை பரிகொடுத்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அவசர ஆலோசனை மேற்கொண்டனர். முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஜெயசங்கரை சந்தித்து பேசினார்.
  • வங்கதேசத்தில் இருந்து சுமார் 1 கோடி பேர் அகதிகளாக மேற்கு வங்கத்திற்கு நுழையலாம் என பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

உலகம்:

  • வங்கதேசத்தின் நிலமை நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் சூழலில், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துள்ளார். அதுமட்டுமன்றி அவர் அந்த நாட்டை விட்டே வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • எத்தியோப்பியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு.
  • வங்காள தேசத்திற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு நிலமை மோசமடைந்து வரும் காரணத்தால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • கமலா ஹாரிஸ் உடன் விவாதம் நடத்த குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டிரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு:

  • 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டி: ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்தியா  ஜெர்மனி அணிகள் இன்று மோதல்
  • 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தை வெல்வதை லக்‌ஷயா சென் தவறவிட்டார். இதன்மூலம், இந்தியாவிற்கு கிடைக்க வேண்டிய 4வது பதக்கம் மிஸ் ஆனது. உலக தரவரிசையில் நம்பர்-2 வீரரும், 2020 டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனுமான விக்டர் ஆக்செல்சனுக்கு எதிரான அரையிறுதியில் லக்ஷயா சென் கடுமையான போட்டியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • அமெரிக்காவின் நோவா லைல்ஸ் பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். இதன்மூலம், ஆக்டிவ் வீரர்களில் உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் என்ற சாதனை படைத்தார்.

நேற்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

 

Latest News