Today’s Top News Headlines: 2 ஆம் தேதி வரை கொட்டப்போகும் மழை.. இன்றைய முக்கியச் செய்திகள்..
இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.
முக்கியச் செய்திகள்: தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதும் நேற்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். வேளாங்கண்ணி பேராலய ஆண்டு விழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இட்டாநகரில் ராணுவ வாகனம் பல்லத்தாக்கில் கவிழ்ந்து 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
தமிழ்நாடு
- வேளாங்கண்ணி பேராலய ஆண்டு விழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.
- 10 ஆம் வகுப்பு தேர்வின் அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களது பள்ளிகளுக்கு நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கொளத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிதாக வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக சென்னை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
- ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்களை விற்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
- அனுமதியின்றி தனி நபரின் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டால் சம்பந்தப்பட்ட நபருக்கு மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை பெருநகர காவல் துறை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
- மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 – 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- தமிழ்நாட்டில் கடந்த 3 மாதத்தில் 40 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
- வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்கும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அன்றைய தினம் அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23ஆம் தேதி முதல் மாநில மாநாடு நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக காவல்துறை பாதுகாப்பு கேட்டு அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா
- இட்டாநகரில் ராணுவ வாகனம் பல்லத்தாக்கில் கவிழ்ந்து 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து சம்பாய் சோரன் விலகினார். விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளார்.
- பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்கா பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா செல்லும் மோடி ஐ.நா.வில் உரையாற்றுகிறார்.
- ஜன்தன் யோஜனா திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி அத்திட்டம் வெற்றியடைய உழைத்த அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகம்
- நைஜீரியாவில் தொடர் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
- டிரம்ப்க்கு பதிலாக குடியரசு கட்சியின் முன்னாள் அதிபர் ஆதரவாளர்கள் 200 பேர் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் அமெரிக்கா அதிபர் தேர்தலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- காஸாவின் மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 9 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர்.
விளையாட்டு
- ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் ஆலோசராக முன்னாள் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளார் ஜாகீர்கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- பிரபல இங்கிலாந்து வீரர் டேவிட் மாலன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.