Today’s Top News Headlines: 3 நாள் பயணமாக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி.. இன்றைய முக்கியச் செய்திகள்..
இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.
நேற்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். சென்னையில் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மூன்று நாள் பயணமாக இன்று பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார்.
தமிழ்நாடு:
- சென்னையில் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இனி வரும் நாட்களில் இரவு நேரங்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
- குடிநீர் வரியை வரும் 30 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. யுபிஐ போன்ற வசதிகளை பயன்படுத்தி பணம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- குரூப் 4 பணியிடங்கள் தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- திருச்சியில் ரூ.17.60 கோடி மதிப்பில் ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
- அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணுவின் காவல் மேலும் 14 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பழனி பஞ்சாமிரதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்து நெய் பயன்படுத்துவதாக வதந்தி பரப்பப்படுவடுதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. பழனி பஞ்சாமிரதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்தே பெறப்படுகிறது என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 15 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2°- 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் உதவித்தொகையை இருமடங்காக உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியா:
- மூன்று நாள் பயணமாக இன்று பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். குவாட் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக செல்கிறார்.
- பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிக்க கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டில் கேரளா, ஒடிசா, பீகார் ஆகிய மாநிலங்களில் மட்டுமே தற்போது இந்த நடைமுறை அமலில் உள்ளது.
- திருப்பதி லட்டு விவகாரம் வேதனை அளிப்பதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது ஒவ்வொரு பக்தரையும் காயப்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.
- ஜம்மு காஷ்மீல் பேருந்து மலைப்பாதையில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து 40 அடி பள்ளத்தில் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே 3 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநல அரசிடம் அறிக்கை கேட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
- திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக தேவஸ்தானம் அறிக்கை அளிக்க வேண்டும் முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். திருப்பதில் லட்டிலி விலக்கு கொழுப்பு சேர்க்கப்பட்டதாக மாநில அரசு குற்றச்சாட்டியுள்ளது.
- கொல்கத்தாவில் மருத்துவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்ற நிலையில், நாளை முதல் பணிக்கு திரும்புவதாக தகவல்க வெளியாகி உள்ளது.
- இனி கோயில்களில் நந்தினி நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
உலகம்:
- லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மெல்ல மெல்ல இலங்கை மீண்டு வரும் நிலையில் இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
- லெபனான் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஜ்புல்லா அமைப்பு ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த சில நாட்களே ஹிஜ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேலுக்கு மோதல் நிலவி வந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
- பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பாதுகாப்புப்படையினர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.
Also Read: ”அவரே பாவம்.. தெளிவா சொல்லிட்டாரு” ரஜினியிடம் துணை முதல்வர் பதவி குறித்து கேள்வி… உதயநிதி கலகல!
விளையாட்டு:
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியை ஆப்கானிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது
- 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா இன்று மோதல்.
- இந்திய வங்கதேசம் இடையிலான முத டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் 56 ரன்கள் அடித்தன் மூலம் சொந்த மண்ணில் முதல் 10 இன்னிங்சில் 750 ரன்களுக்கு மேல் அடித்து சாதனை படைத்துள்ளார்.
நேற்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.