Today’s Top News Headlines: உங்களை சுற்றி நடந்த நிகழ்வுகள்.. இன்றைய முக்கிய செய்திகளாக இதோ!
இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.
முக்கியச் செய்திகள்: நேற்று முதல் தற்போது வரை உங்களைச் சுற்றி நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.மணலி துணை மின் நிலையத்தில் திடீர் தீவிபத்து, தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம், பொங்கல் பண்டிகைக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை நாம் காணலாம்.
தமிழ்நாடு:
- சென்னை மணலி துணை மின் நிலையத்தில் திடீர் தீவிபத்து காரணமாக நள்ளிரவில் சென்னை மாநகர் முழுவதும் இருளில் மூழ்கியதால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். கிட்டதட்ட 3 மணி முதல் 4 மணி நேரம் வரை மின்சாரம் இல்லாத நிலை ஏற்பட்டது.
- வார இறுதி நாட்கள், மிலாடி நபி, ஓணம் பண்டிகை ஆகிய தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழக முழுவதும் பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையி டிக்கெட்டுகள் அனைத்தும் விட்டுத் தீர்ந்துள்ளது.
- மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்த மழை காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நீர் வரத்து குறைந்ததால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- 8 லட்சம் பேர் எழுதக்கூடிய குரூப் 2, குரூப் 2a முதல் நிலைத் தேர்வு நாளை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுவீச்சில் தயாராகி வருகிறது.
- ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை உச்சவரம்பு ரூபாய் 25 லட்சம் ஆக உயர்த்தப்பட்டு அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
- அரசு போக்குவரத்து கழக ஊழியர்களை கூட்டுறவு சங்க கடன் கூட பெற முடியாத நிலைக்கு திமுக அரசு தள்ளியுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்
- தமிழ் திரையுலகில் பாலியல் புகார்கள் தெரிவிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார்.
- பாஜகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் முன்னாள் எம்பி மைத்ரேயன் இணைந்துள்ளார்.
- பள்ளி மாணவர்கள் கூல் லிப் என்னும் போதை பொருளுக்கு அடிமையாகி உள்ளனர், அதனை ஏன் தடை செய்யக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பு உள்ளது.
- தமிழக அரசியல் கட்சிகள் மது ஒழிப்பை தொடர்ந்து வலியுறுத்தி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
- ஆதார் அட்டையை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 14 வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
- புரட்டாசி மாதம் நடைபெறும் திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- மதுரையில் செயல்பட்டு வந்த பெண்கள் விடுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். விடுதியின் உரிமையாளர் கைது செய்யப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட கட்டடத்தை இடிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
- ரயில்களில் பொங்கல் பண்டிகைக்காண டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய நிலையில் ஐந்து நிமிடங்களில் விற்று தேர்ந்ததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
- அக்டோபர் மாதத்திற்கு தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு தள்ளிப் போக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- சிதம்பரம் அருகே கார் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பாலத்தில் அடுத்த மாதம் முதல் போக்குவரத்து தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா:
- டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் என்று வழங்குகிறது.
- அமெரிக்காவில் சீக்கியர் குறித்து ராகுல் காந்தி வெளியிட்ட கருத்துகளுக்கு துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- ரூபாய் 2,200 கோடி ஆன்லைன் பங்கு வர்த்தகம் மோசடியில் தலைமறைவாக இருந்த அசாம் நடிகை மற்றும் அவரது கணவர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் முக்கிய நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- டெல்லியில் காலமான மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல் நாளை பொதுமக்கள் அஞ்சலிக்காக ஏற்பாடு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
- மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள தொழிற்சாலையின் ரசாயன சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
- கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை- மக்களின் நலனுக்காக பதவி விலகும் தயார் என மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.
உலகம்:
- யாகி புயல் காரணமாக வியட்நாமில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்துள்ளது. இந்தாண்டின் மிகப்பெரிய இயற்கை பேரிடர் இதுவாகும்.
- பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் அவதியடைந்தனர். ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானது.
- காஸாவின் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஐநா ஊழியர்கள் உட்பட 34 பேர் உயிரிழந்தனர்.
விளையாட்டு:
- வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் சென்னை வந்தடைந்தனர். 15 ஆம் தேதி போட்டி தொடங்குகிறது.
- பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய முன்னாள் வீரர்கள் பிசிசிஐக்கு அறிவுரை வழங்க வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் மொயின் கான் வலியுறுத்தியுள்ளார்.