Today’s Top News Headlines: இன்றைய முக்கியச் செய்திகள்.. நாடு முழுவதும் நடந்தது என்ன?
இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.
முக்கியச் செய்திகள்: நேற்று முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். மேல்படிப்பிற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று இரவு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்றார். மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி பாரீசில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.
தமிழ்நாடு:
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 17 நாட்கள் அரசுமுறை பயணமாக செல்லும் அவர் செப்டம்பர் 12 ஆம் தேதி தமிழ்நாடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சமக்ரா சிஷா என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையினை மாணவர்களின் நலன் கருதி உடனடியாக வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
- மேல்படிப்பிற்காக அண்ணாமலை நேற்று இரவு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்றார். வெளிநாடு சென்றாலும் எனது இதயம் தமிழகத்தில் தான் இருக்கும் எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்.
- கல்வியை ஒழிக்கவே புதிய கல்விக்கொள்கை திட்டம் அமல்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருவதாக சபாநாயகர் அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார்.
- நடிகர் விஜய்யின் த.வெ.க. கட்சிக்கொடி தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
Also Read: தமிழ்நாட்டில் முக்கிய இடங்களில் இன்று மின்தடை… லிஸ்டில் உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க!
இந்தியா:
- மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து, திகார் சிறையில் இருந்து கவிதா விடுதலையானார்.
- தொழில்நுட்ப காரணங்களால் பாஸ்போர்ட் சேவைக்கான இணையதளங்கள் 3 நாட்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கான 29 வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட பட்டியல் திரும்ப பெறப்பட்ட நிலையில் புதிதாக வெளியிடப்பட்டுள்ளது.
- மலையாள திரையுலகில் எழுந்த பாலியல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அம்மா சினிமா நடிகர்கள் சங்கத்தின் தலைவரான மோகன்லால் உள்ளிட்ட 17 பேர் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
- கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பிரதமர் மோடியை சந்தித்தார். வயநாடு பாதிப்பு தொடர்பாக நிவாரண நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
உலகம்:
- மலேசியாவின் முன்னாள் பிரதமர் முஹ்யித்தின் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- கிழக்கு சூடானில் பெரும் வெள்ளப்பெருக்கு காரணமாக அணை உடைந்த விபத்தில் சிக்கி இதுவரை 60 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
- பாலஸ்தீன அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
Also Read: தமிழ்நாட்டுக்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள்.. எங்கெல்லாம் தெரியுமா?
விளையாட்டு:
- மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி பாரீசில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.
- பிசிசிஐ தலைவரான ஜெய்ஷா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நேற்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.