5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Today’s Top News Headlines: இன்றைய முக்கியச் செய்திகள்.. நாடு முழுவதும் நடந்தது என்ன?

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Today’s Top News Headlines: இன்றைய முக்கியச் செய்திகள்.. நாடு முழுவதும் நடந்தது என்ன?
முக்கியச் செய்திகள்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 25 Aug 2024 06:36 AM

முக்கியச் செய்திகள்: நேற்று முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம். அரசியல் காரணமாக விஜய் எங்களை சந்திக்கவில்லை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். பழனியில் முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு (யுபிஎஸ்) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழ்நாடு:

  • அரசியல் காரணமாக விஜய் எங்களை சந்திக்கவில்லை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
  • திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
  • அரசியல் பேசினால் ஜாக்கிரதையாக பேச வேண்டும் என்று நேற்று சென்னையில் நேற்று நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
  • அனைவரிடமும் தாய் உள்ளத்தோடு அன்பு பாராட்டியவர் கருணாநிதி என்று நேற்று சென்னையில் நேற்று நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின்
    பேசியுள்ளார்.
  • பழனியில் முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குநர் நெல்சனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

மேலும் படிக்க: அப்படி போடு..! 25 ஆண்டுகள் பணியாற்றினால் 50% ஓய்வூதியம்.. ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமல்..

இந்தியா:

  • இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் புதிய ஓய்வூதியத் திட்டத்துக்குப் பதிலாக ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு (யுபிஎஸ்) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகள் பணிபுரியும் ஊழியருக்கு முழு ஓய்வூதியம் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
  • அரசு முறை பயணமாக பிரதமர் மோடி போலாந்து மற்றும் உக்ரைன் சென்றிந்தார். அங்கு இரு நாட்டு தலைவர்களை சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து இன்று இந்தியா திரும்பினார்.
  • ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டு வரப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
  • 2026ஆம் ஆண்டு மார்ச்சுக்குள் நக்சலைட்டுகள் இல்லாத நாடாக இருக்கும் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.
  • கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளி உள்ளிட்ட 7 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது.

உலகம்:

  • ஜெர்மணியில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ், புட்ச் இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என்று நாசா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
  • வங்க தேசத்தில் வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமுள்ள 64 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் சுமார் 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விளையாட்டு:

  • இங்கிலாந்து – இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றுள்ளது.
  • இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை தொடக்க ஆட்டக்காரரும், 2013 சாம்பியன்ஸ் டிராபி வெல்ல முக்கிய காரணமாக இருந்தவருமான ஷிகர் தவான், ஆகஸ்ட் 24ம் தேதியான இன்று காலை கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

நேற்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

Latest News