5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Today’s Top News Headlines: மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா இன்று தாக்கல்.. டி20 உலகக்கோப்பை இறுதி போட்டி.. இன்றைய முக்கியச் செய்திகள்..!

இன்றைய தலைப்புச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Today’s Top News Headlines: மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா இன்று தாக்கல்.. டி20 உலகக்கோப்பை இறுதி போட்டி.. இன்றைய முக்கியச் செய்திகள்..!
இன்றைய முக்கியச் செய்திகள்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 29 Jun 2024 07:23 AM

தமிழ்நாடு:

 • நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம், நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புமாறு ராகுல் காந்திக்கும் வலியுறுத்தல்
 • கள்ளச்சாராய விவகாரங்களை தடுக்க தண்டனைகள் கடுமையாக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டம், மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா இன்று தாக்கல்
 • போதைப்பொருள் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்துவதாக த.வெ.க தலைவர் விஜய் வேதனை
 • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க விரைவில் அமெரிக்கா பயணம்
 • நீட் தேர்வை கண்டித்து ஜூலை 3 ஆம் தேதி திமுக மாணவரணி போராட்டம் அறிவிப்பு
 • தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படும் – வானிலை ஆய்வு மையம் தகவல்
 • நீட் தேர்வில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வர வேண்டும், சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனித்தீர்மானம்

Also Read: இப்படி முதலீடு பண்ணுங்க: மாதம் ரூ.20 ஆயிரம், ரூ.12 லட்சமாக உயரும்!

 • இதுவரை இல்லாத அளவு மழை கொட்டியதால் தத்தளிக்கும் தலைநகர், எய்மஸ் மருத்துவமனையில் கசியும் நீரால் நோயாளிகள் அவதி
 • டெல்லியில் கனமழை – வீட்டின் சுவர் இடிந்து 3 சிறுவர்கள் உயிரிழப்பு
 • பீகாரில் கட்டுமானத்தில் இருந்த மற்றொரு பாலம் இடிந்து விழுந்து விபத்து, உஅய்ர்மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவு
 • ஒவ்வொரு குடும்பத்துக்கும் 3 சிலிண்டர் இலவசம், குடும்ப பெண்களுக்கு ரூ.1500 மாதம் வழங்கப்படும் – மகாராஷ்ட்ரா அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு
 • நீட் முறைகேடு குறித்து விசாரிக்ககோரி எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை ஜூலை 1 ஆம் தேதி வரை ஒத்திவைப்பு
 • ஜியோ, ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து சேவை கட்டணத்தை உயர்த்திய வோடஃபோன் நிறுவனம் – வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி

உலகம்:

 • அமெரிக்க அதிபர் தேர்தல் டிரம்புடன் மேற்கொண்ட நேருக்கு நேர் விவாதம், தன் மீது எழும் விமர்சனங்களால் பின் வாங்க போவதில்லை என ஜோ பிடன் திட்டவட்டம்
 • கடும் வெயிலால் உயிரிழக்கும் பாகிஸ்தான் மக்கள் – பலி எண்ணிக்கை 550 ஐ தாண்டியது
 • இலங்கையில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 60 இந்தியர்கள் கைது

விளையாட்டு:

 • டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை
 • விம்பிள்டன் டென்னிஸ்: முதல் சுற்றில் செர்பியா வீரரை சந்திக்கும் சுமித் நாகல்
 • தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்  – இரட்டை சதம் விளாசிய இந்திய வீராங்கனை ஷபாலி ஷர்மா

Also Read: டெல்லி விமான நிலையத்தில் இடிந்து விழுந்த மேற்கூரை.. ஒருவர் பலி.. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை!