5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

விசிக மதுஒழிப்பு மாநாடு.. கிராம சபை கூட்டம்.. தமிழ்நாட்டின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்!

தமிழ்நாட்டில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், நடைபெற்ற முக்கிய சம்பவங்களை ஒரே தொகுப்பில் காணலாம். நாடு முழுவதும் மகாத்மா காந்தியடிகளின் 155 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விசிக மகளிரணி சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மதுஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது. மேலும் உடல்நலக்குறைவால் சிகிச்சைப் பெற்று வரும் நடிகர் ரஜினியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி நலம் விசாரித்தார் உள்ளிட்ட பல தகவல்கள் இடம் பெற்றுள்ளது.

விசிக மதுஒழிப்பு மாநாடு.. கிராம சபை கூட்டம்.. தமிழ்நாட்டின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
இன்றைய முக்கிய நிகழ்வுகள்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 02 Oct 2024 08:15 AM
  • தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், இதுதொடர்பாக சட்டம் இயற்றப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விசிக தரப்பில் மதுஒழிப்பு கொள்கை மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அக்கட்சியின் மகளிரணி சார்பில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை அக்கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.,யுமான தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக செய்தி தொடர்பாளர் டி,கே,எஸ் இளங்கோவன், அய்யா வைகுண்டர் இயக்கத்தின் தலைவர் பால பிரஜாபதி அடிகளார் உள்ளிட்ட பலரும் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர். அது மட்டுமல்லாமல் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சக தோழமைக் கட்சிகளுக்கும் மாநாட்டில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
  • உடல் நலக்குறைவு காரணமாக தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை அமைந்த துறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு உவமை காரணமாக வயிறு வலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நிலை சீரானதும் இன்று காலை அவர் வீடு திரும்புவார் என மருத்துமனை வட்டாரம் தகவல்கள் வெளியிட்டுள்ளது.
  • காந்தி ஜெயந்தி முன்னிட்டு மதுவிலக்கு அமலாக்க பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல் துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. விழுப்புரம் மற்றும் சேலம் மாவட்டங்களில் தலா இரண்டு பேரும், திருச்சி மாவட்டத்தில் ஒருவரும் இந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த ஆண்டு நடைபெறும் குடியரசு தினத்தன்று ரூபாய் 40 ஆயிரம் பரிசுத்தொகையுடன் விருது வழங்குவார் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: Palani: 40 நாட்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தம்.. பழனி செல்லும் பக்தர்கள் அதிர்ச்சி!

  • நாடு முழுவதும் மகாத்மா காந்தியடிகளின் 155 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் இந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என மத்திய மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது.
  • திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னை பூக்கடையில் இருந்து திருப்பதிக்கு இன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட உள்ளது.
    இதனை முன்னிட்டு ஊர்வலம் செல்லும் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்துக் காவல் துறை அறிவித்துள்ளது. பூக்கடையில் இருந்து காலை 10 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை ஊர்வலம் செல்லும் நேரங்களில் வால்டாக்ஸ் சாலை, மின்ட் சாலை, என்.எஸ்.சி போஸ் சாலை, யானை கவுனி பாலம், சூளை ரவுண்டானா, சூளை நெடுஞ்சாலை ராஜா முத்தையா சாலை, வேப்பேரி நெடுஞ்சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, ஆகிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: Iran Attack Israel: ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்.. ஈரானால் நிலைகுலைந்த இஸ்ரேல்!

  • மஹாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு கடற்கரைகள் மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டு வருகின்றனர். இதனை முன்னிட்டு நீர்நிலைப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
  • உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தை பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நானும் விசாரித்ததாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தல பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரஜினிகாந்த் விரைவில் குணமடைய லதா ரஜினிகாந்த் தான் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் தீவில் அமைக்கப்பட்டுள்ள பாம்பன் ரயில்வே பாலத்தை கப்பல் செல்ல ஏதுவாக பத்து மீட்டர் வரை தூக்கி ரயில்வே ஊழியர்கள் சோதனை செய்தனர். இந்த ரயில் பாதையில் ரயில் சோதனை ஓட்டம் செய்யப்பட்டு தகுதி சான்றிதழ் கிடைத்தவுடன் ராமேஸ்வரத்தில் இருந்து ரயில் சேவை தொடங்கும் இன தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

 

Latest News