5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Special Buses: உடனே டிக்கெட் போடுங்க.. விநாயகர் சதுர்த்தி சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

பொதுவாக தொடர் விடுமுறை, முகூர்த்த நாள், வார இறுதி நாட்களில் தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில் செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி, வார விடுமுறை நாட்கள், 8ஆம் தேதி சுபமுகூர்த்தம் ஆகியவை உள்ளதால் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Special Buses: உடனே டிக்கெட் போடுங்க.. விநாயகர் சதுர்த்தி சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 04 Sep 2024 17:31 PM

சிறப்பு பேருந்துகள்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையிலிருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் மற்ற ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. பொதுவாக தொடர் விடுமுறை, முகூர்த்த நாள், வார இறுதி நாட்களில் தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில் செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி, வார விடுமுறை நாட்கள், 8ஆம் தேதி சுபமுகூர்த்தம் ஆகியவை உள்ளதால் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: The Greatest Of All Time‌: “ஒரே ஒரு நாள் மட்டும்” – விஜய்யின் கோட் பட சிறப்பு காட்சிக்கு அனுமதி!

அதன்படி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து 725 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 190 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. அதே சமயம் சென்னையில் இருந்து திருச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு 125 பேருந்துகள் இயக்கப்படுகிறது.  மேலும் வரும் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறை முடிந்து ஊர் திரும்ப ஏதுவாக மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து சென்னை கிளம்பாக்கத்திற்கு 120 பேருந்துகளும், மற்ற இடங்களுக்கு 100 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இதற்கான டிக்கெட்டுகள் முன்பதிவை எஸ்.இ.டி.சி வலைத்தளப் பக்கத்திலும், நேரடியாக பேருந்து நிலையங்களில் அமைக்கப்பட்ட கவுண்டர்களிலும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 60 நாட்களுக்கு முன்பே பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளதால் பலரும் ஏற்கனவே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளனர். இதனால் ஏற்படும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டே சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Dharmapuri: சாப்பிட்டதற்கு பணம் கொடுக்கணுமா.. ஷூவை காட்டிய எஸ்.எஸ்.ஐ.. சஸ்பெண்ட் செய்த எஸ்.பி.,

மேலும் SETC பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு கட்டண சலுகையும் வெவ்வேறு வகையில் வழங்கப்படுகிறது. ஒரு வழித்தடத்தில் பயணித்து, திரும்பவும் அதே வழித்தடத்தில் பயணிக்க ஒரே சமயத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தால் கட்டண சலுகை வழங்கப்படும். அதேபோல் குறிப்பிட்ட அக்கவுண்ட் மூலம் மாதம் 5 முறைக்கு மேல் ஒரே வழித்தடத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தால் கட்டண சலுகை பெறலாம்.

அதேபோல் சமீபத்தில் முதியவர்கள், குழந்தைகளின் வசதிக்கேற்ப அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிஎஸ்6 ரக  SETC பேருந்துகள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்ட நிலையில், தனியார் பேருந்துகளில் அதிகளவு கட்டணம் வசூலிக்கப்படுவதால் மக்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News