Crime: காதலனை சந்திக்க சென்ற சிறுமி.. இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்..
விஜயின் ஆசை வார்த்தையில் மயங்கிய அந்த சிறுமி கடந்த சனிக்கிழமை, அந்த நபரை சந்திக்க வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அப்போது கோயம்பேட்டிற்கு ஆட்டோவில் சென்றுக்கொண்டிருந்த போது, ஆட்டோ ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் (வயது 47) ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம்: சென்னையில் இருந்து காதலனை சந்திக்க சென்ற சிறுமி ஆட்டோ டிரைவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் வசிக்கும் அந்த சிறுமி ஆன்லைன் மூலம் விஜய் (வயது 26) என்ற நபருடன் பேசி வந்துள்ளார். நாள் போக்கில் அது காதலாக மாறியுள்ளது. விஜய் திருவண்ணாமலையில் வசித்து வருகிறார். விஜயின் ஆசை வார்த்தையில் மயங்கிய அந்த சிறுமி கடந்த சனிக்கிழமை, அந்த நபரை சந்திக்க வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அப்போது கோயம்பேட்டிற்கு ஆட்டோவில் சென்றுக்கொண்டிருந்த போது, ஆட்டோ ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் (வயது 47) ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது அந்த சிறுமியிடம் அத்துமீறிய ராதாகிருஷ்ணன், பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதனை தொடர்ந்து பெரும் போராட்டத்திற்கு பிறகு ராதாகிருஷ்ணனிட்ம் இருந்து தப்பிச் சென்றுள்ளார். பின்னர் தனியார் பேருந்து மூலம் திருவண்ணாமலைக்கு சென்று விக்னேஷ் என்பவரை சந்தித்துள்ளார். பின்னர் இருவரும் அங்கிருந்து பெங்களூருவிற்கு சென்றுள்ளனர். அங்கு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியுள்ளனர். அப்போது விக்னேஷ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும் படிக்க: தமிழகத்திற்கு இன்று கனமழை எச்சரிக்கை… எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? வானிலை மையம் அலர்ட்!
இதற்கிடையில் ஞாயிற்றுகிழமை தனது மகள் காணவில்லை என புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், காணாமல் போன சிறுமி கடந்த சில நாட்களாகவே அடிக்கடி போனில் பேசி வந்ததால், கடந்த 20 நாட்களுக்கு முன்பு அவரது தந்தை சிறுமியை கண்டித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சனிக்கிழமை மாலை நேரத்தில் மீண்டும் அதே நம்பரில் கால் செய்து பேசி வந்ததைப் பார்த்த சிறுமியின் தாயார் சிறுமியிடம் அதைப் பற்றி கேட்க கோபித்துக் கொண்ட சிறுமி எவ்வளவோ தடுத்தும் கேட்காமல் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டதாகவும் செல்லும்போது கையில் தொலைபேசி எதுவும் எடுத்துச் செல்லவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. சிறிது நேரத்தில் கைபேசி எண்ணில் இருந்து போன் செய்த விஜய் என்பவர் திருவண்ணாமலையில் சிறுமி என்னோடு தான் இருக்கிறாள் உன்னால் முடிந்ததைப் பார் என தொலைபேசியில் மிரட்டியதாகவும் காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தருமாறும் புகாரில் தெரிவித்துள்ளனர்.
Also Read: இபிஃப்ஓ உறுப்பினர்களுக்கு குட் நியூஸ்.. இரவோடு இரவாக அரசு எடுத்த அதிரடி முடிவு!
இதனை தொடர்ந்து 16 வயது சிறுமியை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுப்பட்டனர். பின்னர் அந்த சிறுமியில் கைப்பேசியில் லொகேஷன் டிராக் செய்து பெங்களூரு சென்று அந்த பெண்ணை மீட்டுள்ளனர். அந்த சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் மற்றும் விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் இருவர் மீதும் போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.