5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

MK Stalin: முடிந்தது அமெரிக்க சுற்றுப்பயணம்.. சென்னை புறப்பட்டார் ஸ்டாலின்!

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அங்கிருந்து மீண்டும் இந்தியாவுக்கு புறப்பட்டார். தமிழகத்திற்கு அதிகமான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு புறப்பட்டார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் சென்றனர்.

MK Stalin: முடிந்தது அமெரிக்க சுற்றுப்பயணம்.. சென்னை புறப்பட்டார் ஸ்டாலின்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 13 Sep 2024 10:08 AM

முதலமைச்சர் ஸ்டாலின்: தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அங்கிருந்து மீண்டும் இந்தியாவுக்கு புறப்பட்டார். தமிழகத்திற்கு அதிகமான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு புறப்பட்டார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் சென்றனர். செல்லும் முன் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில், “அடுத்து வரும் பல தலைமுறைகளுக்குப் பயனளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவுக்குப் பயணமாகிறேன்” என தெரிவித்திருந்தார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் என அனைவரின் சிறப்பான முறையில் வழியனுப்பி வைக்க முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா புறப்பட்டார்.

சென்னையில் இருந்து துபாய் வழியாக அமெரிக்கா சென்ற அவருக்கு விமான நிலையத்தில் அமெரிக்காவில் வசித்து வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்கள் மிகப்பெரிய வரவேற்பு அளித்தனர். அங்கு பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளை சந்தித்து தொழில் முதலீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தில் தொழில் தொடங்க பெரிய, பெரிய நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்தார். இதில் சில நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்து உடனடியாக புரிந்துணர் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தில் மொத்தமாக தமிழகத்திற்கு 7,616 கோடி ரூபாய் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேசமயம் இந்த சுற்றுப்பயணத்தின் இடையே உடற்பயிற்சி செய்வது, சைக்கிள் ஓட்டுவது என ஸ்டாலின் வெளியிட்ட வீடியோக்களும் இணையத்தில் வைரலானது.

முதல் நாளில் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் சென்னை,கோயம்புத்தூர், மதுரை, செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் 4,100 வேலை வாய்ப்புகள்  பல்வேறு துறைகளில் கிடைக்கும் வகையிலான முதலீடுகளை ஈர்த்தார்.

Latest News