5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

இரவு நேரத்தில் வீடுகள் மீது கல்வீச்சு.. பேய் பயத்தால் அலறும் மக்கள்.. திருப்பூரில் பரபரப்பு..

திருப்பூர் மாவட்டம் ஒட்டப்பாளையம் அருகே 60 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கே கடந்த 15 நாட்களாக இரவு 7 மணி முதல் 12 மணி வரை வீட்டின் மேல் கற்கள் வீசப்படுவதாக மக்கள் தெரிவித்தனர். ஆனால் இந்த கற்களை யார் வீசுகிறார்கள் என்பது குறித்து தெரியவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி மக்கள் அருகில் இருக்கும் கோயொலில் தஞ்சமடைந்துள்ளனர்.

இரவு நேரத்தில் வீடுகள் மீது கல்வீச்சு.. பேய் பயத்தால் அலறும் மக்கள்.. திருப்பூரில் பரபரப்பு..
வீடுகள் மீது கல் வீச்சு
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 10 Jul 2024 13:43 PM

வீட்டின் மேல் வீசப்பட்ட கற்கள்: திருப்பூர் மாவட்டம், படியூர் ஊராட்சியில் ஒட்டப்பாளையம் கிராமத்தில் கடந்த 15 நாட்களாக நள்ளிரவு நேரத்தில் வீடுகளின் மீது கற்கள் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கிராம மக்கள் அருகில் உள்ள கோயிலில் தஞ்சமடைந்துள்ளனர். அங்கேயே சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள். திருப்பூர் மாவட்டம் ஒட்டப்பாளையம் அருகே 60 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கே கடந்த 15 நாட்களாக இரவு 7 மணி முதல் 12 மணி வரை வீட்டின் மேல் கற்கள் வீசப்படுவதாக மக்கள் தெரிவித்தனர். ஆனால் இந்த கற்களை யார் வீசுகிறார்கள் என்பது குறித்து தெரியவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதி மக்கள் அருகில் இருக்கும் கோயொலில் தஞ்சமடைந்துள்ளனர்.

கோயிலில் தங்கியிருக்கும் மக்கள் அங்கே சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த கற்களை யார் வீசுகிறார்கள் என்று தூக்கத்தை விட்டு தேடி வருகின்றனர். தற்போது வரை 9 வீடுகள் கற்கள் வீசப்பட்டு சேதமடைந்துள்ளது. ஆனால் யாருக்கும் தற்போது வரை காயம் அடையவில்லை. இருப்பினும் இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக யாரும் சிக்கவில்லை. எனவே இது தொடர்பாக படியூர் ஊராட்சி மற்றும் காங்கேயம் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.

Also Read: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. களம் யாருக்கு சாதகம்? விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு..

அந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தை யார் செய்கிறார்கள் என தெரியவில்லை. போலீசாரும் தொடர்ச்சியாக தேடி வருகின்றனர். இரவு நேரத்தில் வீட்டின் மீது கற்கள் விழுந்ததை தொடர்ந்து காலையிலும் வீடுகள் மீது கற்கள் விழுந்து வருகிறது. இதனால் செய்வதறியாது மக்கள் திகைத்து போயுள்ளனர். மேலும் போலீசார் தரப்பில் யார் இதை செய்கிறார்கள் எனவும் தெரியவில்லை.

ஊர் மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் தற்போதைக்கு அப்பகுதி முழுவதும் சிசிடிவி கேமிராக்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், 20 போகஸ் லைட்டுகள் வைக்கப்பட்டு கிரேன்கள மூலமாகவும் கண்காணிக்கப்படுகிறது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில் இதனை செய்வது மனிதர்களா இல்லை குட்டி சாத்தானா என தெரியவில்லை என கூறுகின்றனர். மேலும் போலீசார் தரப்பில் ஒத்துழைப்பு வழங்கப்பட்டாலும், தற்போது வரை இந்த சம்பவம் குறித்து தெளிவான தகவல் கிடைக்கவில்லை என கூறுகின்றனர்.

Also Read: 50 பேரை ஏமாற்றி திருமணம்.. லட்சக்கணக்கில் பணம் பறிப்பு.. தாராபுரத்தில் இளம்பெண் சிக்கியது எப்படி?

Latest News