5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Sivagangai: கொட்டகையில் பிடித்த தீ.. குன்றக்குடி கோயில் யானை உயிரிழப்பு!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடி ஊர் தமிழக மக்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானது. இந்த ஊரில் சண்முகநாதன் கோயில் அமைந்துள்ளது. சுற்றுவட்டாரத்தில் மிகவும் பிரபலமான இந்த கோயிலுக்கு நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வது வழக்கம். இந்தக் கோயிலில் யானை சுப்புலட்சுமி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது.

Sivagangai: கொட்டகையில் பிடித்த தீ.. குன்றக்குடி கோயில் யானை உயிரிழப்பு!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 13 Sep 2024 08:23 AM

கோயில் யானை உயிரிழப்பு: சிவகங்கை அருகே குன்றக்குடி கோயிலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கோயில் யானை பரிதாபமாக உயரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடி ஊர் தமிழக மக்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானது. இந்த ஊரில் சண்முகநாதன் கோயில் அமைந்துள்ளது. சுற்றுவட்டாரத்தில் மிகவும் பிரபலமான இந்த கோயிலுக்கு நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வது வழக்கம். இந்தக் கோயிலில் யானை சுப்புலட்சுமி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது. இந்த யானை பக்தர் ஒருவரால் கோயிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடை எனக் கூறப்படுகிறது.

Also Read: Bike Washing Tips: பைக்கை கழுவும் போது இந்த தவறை செய்யாதீர்கள்.. அதிக செலவை இழுத்து விடும்!

இந்த யானையை பராமரிக்கும் பொருட்டு கோயில் நிர்வாகம் சார்பில் குன்றக்குடி மலை அடிவாரத்தில் தகரக் கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் நேற்று இரவு கோயிலில் பணி முடிந்து யானை கொட்டகையில் வழக்கம்போல சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது. இதனிடையே நள்ளிரவில் திடீரென இந்த கொட்டைகளில் தீப்பிடித்தது. அருகில் காய்ந்த செடி, கொடிகள் இருந்ததால் தீ மளமளவென பரவியது. இதனால் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த யானை வெப்பம் தாங்க முடியாமல் பயங்கர சத்தத்துடன் பிளிறியது.

மேலும் ஒரு கட்டத்தில் பயந்து போய் சங்கிலியை அறுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியே ஓடி வந்துவிட்டது. யானை பிளிறிய சத்தம் பல அடி தூரம் கேட்டது. இதனால் யானைக்கு என்ன ஆச்சு என திடுக்கிட்டு கோயில் காவலாளி, பாகன் மற்றும் உள்ளூர் மக்கள் உள்ளிட்ட அனைவரும் ஓடி வந்து என்ன நடந்தது என பார்த்தனர். அவர்கள் அங்கு வருவதற்குள் யானை கொட்டகை பெருமளவு எரிந்து விட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அனைவரும் கோயில் யானைக்கு என்ன ஆனது என பதறிப்போயினர். அப்பகுதியில் சுற்றி தேடிப் பார்த்தபோது அது சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்தது.

Also Read: Aadhar Card Update: செம்ம சான்ஸ்.. ஆதார் கார்ட்டை அப்டேட் செய்ய கூடுதல் அவகாசம்.. சீக்கிரம் வேலைய முடிங்க!

இதனைத் தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த இரு துறை அதிகாரிகளும்  யானையை சாந்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அதற்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளித்தனர். ஆனால் தீ விபத்தினால் யானையின் தும்பிக்கை, முகம், வயிறு, தலை, பின்பகுதி, வால் உள்ளிட்ட இடங்களில் தீக்காயங்கள் ஏற்பட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் உடனடியாக யானைக்கு சிகிச்சை அளித்து காயப்பட்ட இடத்தில் மருந்தும் போட்டனர்.

இந்நிலையில் குன்றக்குடி போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக இந்த விபத்து நடந்ததா? அல்லது வேறு ஏதும் சதி செயல் காரணமா? என்று கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் தொடர் சிகிச்சை அளித்தும் கோயில் யானை சுப்புலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தது. தீ விபத்தில் சிக்கி கோயில் யானை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கோயில் யானை சுப்புலட்சுமிக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அதுமட்டுமல்லாமல் சுற்றுவட்டார மக்களும் கோயில் யானை தீ விபத்தில் இறந்த தகவலை அறிந்து நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து யானை நல்லடக்கம் இன்று நடைபெறுகிறது.

Latest News