Tamilnadu Weather Alert: இரவு 10 மணி வரை 13 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.. எங்கே தெரியுமா?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மழை அலர்ட்: தமிழ்நாட்டில் இரவு 10 மணி நேரம் வரை, கோவை, தென்காசி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கடலூர், வேலூர், சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக, வரும் 8 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதேபோல், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read: ரஷ்ய உளவாளி பெலுகா திமிங்கலம்.. நார்வேயில் சடலமாக கண்டெடுப்பு..வெளிநாடுகளின் சதி காரணமா?
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை:
அரூர் (தர்மபுரி), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), மகாபலிபுரம் AWS (செங்கல்பட்டு), சிற்றாறு-I (கன்னியாகுமரி), மிமிசல் (புதுக்கோட்டை), BASL முகையூர் (விழுப்புரம்), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி) தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
அதேபோல் தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரையில் 39.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து நாகையில் 38.3 டிகிரி செல்சியஸ், தஞ்சாவூரில் 39 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரையில், 36.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
02.09.2024: மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், வடதமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
02.09.2024: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்:
02.09.2024: மத்தியமேற்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கேரளா – கர்நாடகா கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.