5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

TN Goverment: சென்னையில் ரூ.6 லட்சத்திலே வீடு.. ஈஸியா வாங்கலாம்? மிஸ் பண்ணாதீங்க.. தமிழக அரசு அசத்தல் ஏற்பாடு!

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் தமிழகம் முழுவதும் 22,049 குடியிருப்புகளை விற்பனை செய்யும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதற்கு பயனாளிகள் விண்ணப்பிக்கவும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கான விவரங்களை தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம். மேலும், இதற்கு எப்படி விண்ணப்பிப்பது, யாருக்கெல்லாம் கிடைக்கும் போன்ற விவரங்களை பார்ப்போம்.

TN Goverment: சென்னையில் ரூ.6 லட்சத்திலே வீடு.. ஈஸியா வாங்கலாம்? மிஸ் பண்ணாதீங்க.. தமிழக அரசு அசத்தல் ஏற்பாடு!
தமிழக அரசு (picture credit: Getty)
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 28 Sep 2024 17:15 PM

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் தமிழகம் முழுவதும் 22,049 குடியிருப்புகளை விற்பனை செய்யும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதற்கு பயனாளிகள் விண்ணப்பிக்கவும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் குடிசை இல்லாத நகரங்களை ஏற்படுத்தும் நோக்கில் 1970ஆம் ஆண்டு குடிசை மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. இது அண்மையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியம் என பெயர் மாற்றப்பட்டது. குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கொண்ட குடியிருப்புகளை கட்டிக் கொடுப்பது தான் இந்த வாரியத்தின் நோக்கமாகும். முதலில் இந்த திட்டம் சென்னையில் மட்டுமே இருந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்படியாக நகராட்சி, பேரூராட்சி என அனைத்து மாவட்டங்களுக்கு விரிவு செய்யப்பட்டது.

நகர்ப்புற மேம்பாட்டு வாரியம்:

கடந்த மூன்று ஆண்டுகளில் 29,439 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் 22,049 அடுக்குமாடி குடியிருப்புகளை விற்பனை செய்வதற்கு தமிழக அரசு பட்டியலிட்டு உள்ளது.

இதில் ஒவ்வொரு குடியிருப்புகளுக்கு மத்திய ரூ.1.50 லட்சமும், மாநில அரசு 7.50 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை மானியம் வழங்கப்டுகிறது. மீதமுள்ள தொகையை சம்பந்தப்பட்ட பயனாளிகள் செலுத்த வேண்டியிருக்கும். அதாவது, பயனாளிகள் ரூ.85,000 முதல் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை செலுத்த வேண்டியிருக்கும்.

Also Read: பூமி பூஜை நடத்தும் விஜய்.. மாநாட்டுக்கு ரெடியாகும் த.வெ.க.. புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு!

இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 17 மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 62 திட்டங்களில் உள்ள 22,049 வீடுகள் விற்பனை உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான விவரங்களை தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்:

குடிசைப்பகுதி, ஆட்சேபனை உள்ள அரசு புறம்போக்கு நிலங்களான நீர் நிலை, காப்பு காடுகள், அபாயகரமான பகுதிகளான வெள்ள சேதபகுதிகள், கடலோர பகுதிகள் மற்றும் பேரிடர் ஏற்படும் பகுதிகளில் வசிப்பவர்கள் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் மூலம் வீடு பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், சிதலமடைந்த வாரிய குடியிருப்புகளில் வசிப்பவர்கள், சாலையோரத்தில் வசிப்பவர்கள். திட்டப்பணிகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு, பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர் என்பதை உறுதி செய்ய குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் அல்லது ரூ.3 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். இதற்கான வருவாய் துறை சான்று சமர்ப்பிக்க வேண்டும்.

குடும்ப உறுப்பினர்கள் எவருக்கும் தங்களது பெயரில் குடியிருப்பு மற்றும் மனைகள் இருக்க கூடாது. இதற்கான உறுதி மொழிப்பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு பெற என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். என்ற இணையதளத்தை க்ளிக் செய்து ‘நம்ம குடியிருப்பு’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

இதனை அடுத்து வீடு வேண்டி விண்ணப்பம் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் வீட்டின் விவரங்கள் காட்டப்படும். அதில் வீட்டின் விலை, எந்த இடம் போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் Apply என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து உங்கள் வீடுகளை விண்ணப்பித்து கொள்ளலாம்.

தேவையான ஆவணங்கள்:

ஆதார் கார்டு, ரூ.3 லட்சம் வருமானத்திற்கான சான்று, குடும்ப உறுப்பினர்களின் விவரம் உள்ள ஆதார் அல்லது ரேசன் கார்டு, குடும்ப உறுப்பினர்கள் எவருக்கும் தங்களது பெயரில் குடியிருப்பு மற்றும் மனைகள் இல்லை என்பதற்கான உறுதி மொழி பத்திரம் ஆகியவை விண்ணப்பிக்கும்போது சமர்ப்பிக்க வேண்டும்.

சென்னையில் 206 வீடுகள்:

சென்னையில் 2 திட்டங்களின் கீழ் அடுக்குமாடி வீடுகள் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை மணலி புதுநகர் திட்டம் 2-ல் உள்ள 6 வீடுகள், மணலி புது நகர் திட்டம் 7-ல் உள்ள 200 வீடுகள் விற்பனையாகிறது. திட்டம் 2-ல் உள்ள 6 வீடுகள் தலா ரூ.10 லட்சத்து 37 ஆயிரத்து மதிப்பில் விற்பனை செய்யப்படுகிறது. திட்டம் 7-ல் உள்ள 200 வீடுகள் தலா ரூ.6.73 லட்சம் மதிப்பில் விற்பனை செய்யப்படுகிறது.

Also Read: இளைஞர்களே ரெடியா.. 5 ஆயிரம் பேருக்கு வேலை… தமிழக அரசின் புதிய துவக்கம்!

மேலும், செங்கல்பட்டில் இரண்டு திட்டங்களில் 1,267 வீடுகள், திருவள்ளுரில் மொத்தம் 6,532 வீடுகள், வேலூரில் 519 வீடுகள், கடலூரில் 693 வீடுகள், சேலத்தில் 280 வீடுகள், ஈரோட்டில் 3,996 வீடுகள், திருப்பூரில் 224 வீடுகள், தஞ்சாவூரில் 390 வீடுகளும் விற்பனை செய்யப்படுகிறது.  மேலும், பட்டுக்கோட்டை, மதுரை, தேனி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் வீடுகள் விற்பனையாகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். முதலில் விண்ணப்பிக்கும் நபர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News