Crime: மனைவியை கொன்று துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்த கணவன்.. சிக்கியது எப்படி?
திருவண்ணாமலை நகராட்சிக்குட்பட்ட பே கோபுரம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவர் ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரண்யா. திருவண்ணாமலையில் உள்ள கவரிங் கடையில் பணிபுரிந்து வந்த சரண்யாவிற்கும், கோபிக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று ஒரு மகளும் இரண்டு மகன்களும் உள்ளனர்.
திருவண்ணாமலையில், காதல் மனைவியை துண்டு துண்டாக வெட்டி காட்டில் வீசிய கணவன் கைது செய்யப்பட்ட சம்பவெம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை நகராட்சிக்குட்பட்ட பே கோபுரம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவர் ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரண்யா. திருவண்ணாமலையில் உள்ள கவரிங் கடையில் பணிபுரிந்து வந்த சரண்யாவிற்கும், கோபிக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று ஒரு மகளும் இரண்டு மகன்களும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த தீபாவளி தினத்தன்று கணவன் மனைவிக்கு இடையே சண்டை முற்றியதாக கூறப்படுகிறது.
மகளை காணவில்லை என தாய் அளித்த புகார்:
தீபாவளி தினத்தன்று மகளுக்கு வாழ்த்து கூற அவரது தாய் அரசுடையாம் பட்டு கிராமத்தைச் சேர்ந்த காவேரி, சரண்யாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட பொழுது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து பலமுறை தொடர்பு கொண்டு பேச முடியாததால், சந்தேகம் அடைந்த காவேரி மகளின் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது கடந்த சில நாட்களாகவே மகள் வீட்டில் இல்லை என கூறியதாகவும் அக்கம் பக்கத்தில் விசாரணை செய்ததில் சந்தேகம் அடைந்த காவேரி தங்களது உறவினர் இல்லங்களிலும் தேடி பலன் இல்லாததால், திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் தனது மகள் காணவில்லை என புகார் அளித்தார்.
இதுகுறித்து மருமகன் கோபியிடம் கேட்ட பொழுது சரியான பதில் அளிக்காமல் இருந்ததால் புகாரில் மருமகன் மீது சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும் படிக்க: போதைப்பொருள் சப்ளை செய்த துணை நடிகை எஸ்தர்.. போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம்..
மனைவியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டிய கணவன்:
ஆனால் மனைவி காணாமல் போன எந்த ஒரு சோகமும் தெரியாமல் ஆட்டோ ஓட்டுனர் கோபி திருவண்ணாமலைிலேயே சுற்றி வந்தார். மாமியார் புகார் அளித்ததும் தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்த அவருக்கு காவல்துறையினர் வீட்டிற்கு சென்றதும் காவல்துறையினரை கண்டு தப்பிக்க முயற்சித்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் கோபியை கைது செய்து விசாரணை செய்தியில் தனக்கும் தனது மனைவிக்கும் ஏற்பட்ட தகராறில் மனைவியை கொலை செய்ததாகவும், 8 துண்டுகளாக வெட்டியதாக கூறியுள்ளார். மேலும் தனது தாய் உதவியுடன், பிள்ளைகளை அழைத்துக்கொண்டு திருச்செந்தூர் செல்வதாக கூறி திருவண்ணாமலையைச் சேர்ந்த கார் ஓட்டுநர் விமலை அழைத்துக் கண்டு பெங்களூருக்கு புறப்பட்டனர்.
மேலும் படிக்க: நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. 15 ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?
வழியில் டீக்கடையில் நிறுத்த சொல்லிய கோபி துண்டு துண்டுகளாக மனைவியின் உடலை வெட்டி சூட்கேஸில் வைத்திருந்ததை கிருஷ்ணகிரிக்கு அருகாமையில் உள்ள காட்டில் வீசிவிட்டு சென்றதாகவும் ஒப்புக் கொண்டதாக முதற்கட்டன்சாரணையில் தெரிய வருகிறது.
கோபியை கைது செய்த நகர போலிசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் அவரது தாயார் மற்றும் கார் ஓட்டுனர் விமல் ஆகியோர் சிக்குவார்களின் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.