Tamilnadu Powercut: சென்னை முதல் சேலம் வரை.. நாளை மின்தடை எங்கெல்லாம் தெரியுமா?
மின்மிகை மாநிலம் என சொல்லப்படுகிற தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது துணை மின்நிலையங்களில் சுழற்சி முறையில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றது. இத்தகைய பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்படும்.
மின்தடை: மின்மிகை மாநிலம் என சொல்லப்படுகிற தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது துணை மின்நிலையங்களில் சுழற்சி முறையில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றது. இத்தகைய பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்படும். இந்த நிலையில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நாளை மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மதியம் 2.00 மணிக்கு பின் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் (05.09.2024) காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரையும், சில இடங்களில் 4 மணி வரையும் பராமாரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: Erode: திருமணத்தை மீறிய உறவு.. குடியிருந்த வீட்டுக்கு தீவைத்த ஐபிஎஸ் அதிகாரி
சென்னை
திருவேற்காடு: ராணி அண்ணா நகர், அசோக் மெடோவ்ஸ், வள்ளி கொல்லை மேடு, பெருமாளகரம்
டி ஐ சைக்கிள்: டாஸ் தொழிற்பேட்டை, பிஎம்ஆர் தொழிற்பேட்டை, காமராஜபுரம், கே.எஸ்.ஆர் நகர், வி.ஜி.என்.சாந்தி நகர், காஸ்மோபொலீஸ், ஃப்ரண்ட் பார்க், விக்டோரியா பார்க், ஹைவ் ஃபேஸ் 1 மற்றும் 2
தாம்பரம்: சர்வீஸ் சாலை, இன்விகான் பிளாட், டி டி கே நகர், எருசலேம் நகர், சர்ச் சாலை, ரத்தினகுமார் அவென்யூ, மருதம் பிளாட், ஏ.எஸ்.ராஜன் நகர், ஜி கே மூப்பனார் அவென்யூ ஆகிய இடங்கள்
கரூர்
புஞ்சை புகளூர்,தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம் மற்றும் நொய்யல் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்விநியோகம் இருக்காது.
கோயம்புத்தூர்
செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், சேரபாளையம், மதியழகன் நகர், சரவணம்பட்டி, அறிவொளி நகர்,மதுக்கரை, பாலத்துறை, ஏ.ஜி.பதி ஆகிய இடங்கள்
ஈரோடு
கோவுண்டாச்சிபாளையம், ஈங்கூர்,தெற்கு பெருந்துறை பகுதி, வெள்ளோடு, பள்ளப்பாளையம், முகசிபிடாரியூர் வடக்கு பகுதி, கொங்கு கல்லூரி, நந்தா கல்லூரி, மூலக்கரை, வேலாயுதம்பாளையம், 1010 நாசவளர் காலனி, பெருந்துறை ஆகிய பகுதிகள்.
Also Read: Health tips: உற்சாகத்தையும் இளமையையும் கொட்டி தரும் நெல்லிக்காய்!
கிருஷ்ணகிரி
குந்தாரப்பள்ளி, குப்பாச்சிப்பாறை, கக்கன்புரம், கங்கசந்திரம், ஜீனூர், ஜிஞ்சுபாலி, சின்னகொத்தூர், குருபரப்பள்ளி,விநாயகபுரம், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி
மதுரை
எல்காட், கோமதிபுரம், உத்தங்குடி, கண்மாய்பட்டி ஆகிய பகுதிகள்.
சேலம்
நடுவலூர், புனல்வாசல், கிழக்கு ராஜபாளையம், பின்னனூர், எடப்பாடி, கணவாய்காடு ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.