5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ரூ.12000 சம்பளம்.. காகிதம் பொறுக்கிய நபருக்கு உடனடி வேலை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

சென்னை கிண்டியில் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தெருவோரங்களில் காகிதம் எடுத்து வந்தவரை கண்டு அழைத்து விசாரித்துள்ளார். அவரோடு பேசியதில், அவர் வேலையின்றி இருந்துவரும் நிலையை அறிந்து தன் வீட்டிற்கு அழைத்துச்சென்று குளிக்க சொல்லி, உடை மற்றும் உணவு வழங்கியிருக்கிறார். பின், 12,000 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்த்துவிட்டிருக்கிறார்.

ரூ.12000 சம்பளம்.. காகிதம் பொறுக்கிய நபருக்கு உடனடி வேலை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடுத்த இன்ப அதிர்ச்சி!
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 22 Jul 2024 16:30 PM

அமைச்சரின் நெகிழ்ச்சி செயல்: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் இன்று சென்னை கிண்டி பகுதியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியில் தெருவோரத்தில் ராஜா என்பவர் குப்பை சேகரித்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்த அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு தனது வணக்கத்தை ராஜா கூறினார். உடனே அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடைபயிற்சி மேற்கொள்வதை நிறுத்திவிட்டு அவரிடம் பேசினார். நீங்கள் எந்த ஊரு, என்ன வேலை செய்கிறீர்கள் என பல விஷயங்களை குறித்து விசாரித்தார். அவர் வேலையின்றி இருந்துவரும் நிலையில் அறிந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், நான் வேலை கொடுத்தால் செய்வீர்களா என்று கேட்டுள்ளார். நிச்சயம் செய்கிறேன் என ராஜா கூறியுள்ளார்.

Also Read: அடுத்த 7 நாட்களுக்கு கொட்டப்போகுது மழை.. எந்தெந்த மாவட்டங்கள்?

உடனே அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவரை தன் வீட்டிற்கு அழைத்து சென்று குளிக்க சொல்லி, உடை மற்றும் உணவு வழங்கியிருக்கிறார். பின் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் தற்காலிக அடிப்படையில் ரூ.12,000 மாத சம்பளத்தில் அவரை வேலைக்கு சேர்த்துவிட்டிருக்கிறார். திருச்சி பகுதியைச் சேர்ந்த ராஜா, தினமும் சாலையோரங்களில் கிடக்கும் குப்பைகளை சேகரித்து அதை கடையில் எடை போட்டி அதில் கிடைக்கும் காசு மூலம் தனது அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், ஒரே ஒரு வணக்கத்தால் அவரது வாழ்க்கை நிலை மாறியது என்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, “இன்று காலை நடைபயிற்சி முடித்து வந்துகொண்டிருந்த போது சாலை ஓரத்தில் பேப்பர் பிளாஸ்டிக் போன்ற கழிவுகளை சேகரித்துக்கொண்டிருந்த ஒருவர் நம்மை அடையாளங்கண்டு வணக்கம் சொன்னார்.அவர் குறித்து விசாரித்ததில் திருச்சியை சார்ந்த ராஜா என்பதும்,அவர் தினந்தோறும் இப்பணியை செய்து அதில் கிடைக்கும் வருவாயில் அரைகுறையாக உண்டு சாலையோரங்களில் படுத்துறங்கும் ஆதரவற்ற தோழர் என்பதும் தெரியவந்தது.

அவரை நமது தொழிலாளர் குடியிருப்பு இல்லத்தில் குளிக்கவைத்து மாற்று ஆடைகளை தந்து உடுக்கவும் வைத்து கலைஞர் நூற்றாண்டு உயற்சிறப்பு மருத்துவமனையில் அவரின் நோய் பாதிப்புகள் கண்டறியப்பட்டு தொடர் சிகிச்சைகளும்,வாழ்வாதாரத்திற்கு தற்காலிக பணி ஒன்றும் வழங்க நடவடிகை எடுக்கப்பட்டது” தெரிவித்தார்.

Also Read: அண்ணாமலைக்கு ரூ.500 லஞ்சம் கொடுத்த தாத்தா.. நடந்தது என்ன?

Latest News