5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Ration Shops: ரேசன் கடையில் பருப்பு, பாமாயில் வாங்கலயா? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தம் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இந்த ரேசன் அட்டைதாரர்களுக்கு மாநில முழுவதும் 34,793 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நியாய விலைக்கடைகளில் ஆகஸ்ட் மாதத்திற்கான பருப்பு மற்றும் பாமாயிலை வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Ration Shops: ரேசன் கடையில் பருப்பு, பாமாயில் வாங்கலயா? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ரேசன் கடை
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 31 Aug 2024 19:01 PM

ரேசன் கடைகள்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ரேஷன் அட்டை வழங்கப்படுகிறது. இந்த ரேஷன் அட்டையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களும் இடம் பெற்றிருக்கும். குறிப்பாக,  தமிழகத்தில் மொத்தம் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இந்த ரேசன் அட்டைதாரர்களுக்கு மாநில முழுவதும் 34,793 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு மாநிய விலையில், பருப்பு, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. அதுமட்டுமன்றி இலவச அரிசியும் வழங்கப்படுகிறது. இந்த ரேஷன் அட்டை திட்டம் மூலம் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், ரேஷன் கடைகளில் வழக்கமாக அந்த மாதத்திற்கான பொருட்களை குறிப்பிட்ட மாதம் முடிவதற்குள் வாங்க வேண்டும்.

இல்லையென்றால் அந்த மாதத்திற்கான பொருட்கள் அடுத்த மாதம் வழங்கப்படாது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கான பொருட்கள் செப்டம்பர் 5ஆம் தேதி வரை ரேசன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் பல ரேசன் கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் இன்னும் விநியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Also Read: ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதில் சிக்கல்.. உயர் நீதிமன்றத்தில் முறையீடு..

தமிழக அரசு முக்கிய அறிவிப்பு:

இதையடுத்து, நியாய விலைக்கடைகளில் ஆகஸ்ட் மாதத்திற்கான பருப்பு மற்றும் பாமாயிலை வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், ”பொது விநியோகத் திட்ட குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் 2024 மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் செப்டம்பர் மாதம், 5 ஆம் தேதிவரை பெற்றுக் கொள்ளலாம்.

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் ஆகஸ்ட் 2024 ஆம் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒதுக்கீட்டினை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் முழுமையாகப் பெற்றுப் பயன்பெறும் வகையில், பொதுமக்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை வரும் செப்டம்பர் 2024, மாதம் 5 ஆம் தேதிவரையில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read:  அச்சச்சோ.. சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு.. நள்ளிரவு முதல் அமல்!

ரேஷன் பொருட்கள் வாங்கவில்லை என்றால் என்ன நடக்கும்?

ரேஷன் கடைகள் மூலம் மாதம் மாதம், அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள் வழங்கப்படும். இதுபோன்ற சூழலில், தொடர்ந்து 6 மாதங்களாக ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காத நுகர்வோரின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று  அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பிற்கு பிறகும் நுகர்வோர் ரேஷன் கடைக்கு வரவில்லை என்றால், அவர்களது பெயர் நீக்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி தகுதியான மற்றொருவரின் பெயரைச் சேர்த்து காலி இடம் நிரப்பப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Latest News