5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

” ஆட்சியில் பங்கு வேண்டும்” – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கடிதம்.. விஜய் சொன்னதன் விளைவா?

மாநாட்டில் பேசிய கட்சி தலைவர் விஜய், கட்சியின் கொள்கை கோட்பாட்டுகளை தெரிவித்தார். பின்னர் கொடியில் இடம்பெற்றிருக்கும் யானை, சிவப்பு மஞ்சள் நிறம், வாகை மலர் பற்றி குறிப்பிட்டார். கடைசியாக தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைக்கும் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என குறிப்பிட்டு பேசினார். இந்த மாநாடு தமிழ்நாடு அரசியலில் பேரும் எதிர்ப்பார்ப்பை கிளப்பிய நிலையில் கட்டணி ஆட்சி பற்றி பேசியது அரசியல் கட்சிகள் இடையே பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

” ஆட்சியில் பங்கு வேண்டும்” – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கடிதம்.. விஜய் சொன்னதன் விளைவா?
கோப்பு புகைப்படம்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 28 Oct 2024 18:27 PM

ஆட்சியில் பங்கு வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் மாநில பொதுச் செயலாளர் சரவணன் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இடம் அளிக்க வேண்டும் என்றும் அப்படி கூட்டணி ஆட்சி அமைந்தா மகிழ்ச்சி என குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இருக்கும் வி.சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்காக தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் திரண்டனர். லட்சக்கணக்கில் மக்கள் வந்ததால் வி.சாலை ஸ்தம்பித்து போனது. மக்கள் கூட்டம் காரணமாக மாநாடு சற்று முன்னதாகவே தொடங்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சொன்னது என்ன?

மாநாட்டில் பேசிய கட்சி தலைவர் விஜய், கட்சியின் கொள்கை கோட்பாட்டுகளை தெரிவித்தார். பின்னர் கொடியில் இடம்பெற்றிருக்கும் யானை, சிவப்பு மஞ்சள் நிறம், வாகை மலர் பற்றி குறிப்பிட்டார். கடைசியாக தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைக்கும் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என குறிப்பிட்டு பேசினார். இந்த மாநாடு தமிழ்நாடு அரசியலில் பேரும் எதிர்ப்பார்ப்பை கிளப்பிய நிலையில் கட்டணி ஆட்சி பற்றி பேசியது அரசியல் கட்சிகள் இடையே பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

முதலமைச்சருக்கு பறந்த கடிதம்:

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் சரவணன் கடிதம் எழுதியுள்ளார். அதில், “ தமிழக முதல்வரும் இந்தியா கூட்டணி கட்சி தமிழக தலைவருமான மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள் நேற்று நடைபெற்ற அவர்களது கட்சி மாநாட்டில் 2026 யில் நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் தங்கள் கட்சி கூட்டணி ஆட்சிக்கு தயார் என பேசி உள்ளார்.

மேலும் படிக்க: கைகள் இல்லை.. தன்னம்பிக்கை மட்டும்தான்.. இணையத்தை வியப்புக்குள்ளாக்கிய சோமேட்டோ ஊழியரின் வீடியோ!

ஆகவே தாங்கள் தற்பொழுதே நமது கூட்டணி கட்சிகளுக்கு மந்திரி சபையில் இடம் அளிக்க வேண்டும். தங்கள் கட்சி தொடங்கிய காலம் முதல் கூட்டணி கட்சியின் ஆதரவில் தான் ஆட்சிக்கு வந்துள்ளீர்கள் எனவே தமிழகத்தில் தங்கள் தலைமையில் கூட்டணி ஆட்சி மலர்ந்தால் நல்லது. இதை தான் தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள். எனவே தமிழக மக்களின் என்னத்தை தாங்கள் நிறைவேற்றி தமிழகத்திற்கு தாங்கள் முன் உதாரணமாக திகழ வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

திமுக கூட்டணியில் நிலவும் குழப்பம்:

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மார்க்ஸிட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனித நேய மக்கள் கட்சி, கொங்கு தேசிய மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி கட்சியுடன் சேர்ந்து தான் திமுக போட்டியிட்டது. அப்போது யாருக்கு எத்தனை இடங்கள் வழங்க வேண்டும் என்பதில் நீண்ட இழுபறி இருந்து வந்தது. இதனால் ஒரு சில கட்சிகள் கூட்டணி விட்டு வெளியேறும் நிலையில் இருப்பதாக தகவலும் பரவின. ஆனால் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் கூட்டணி கட்சிகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டது.

மேலும் படிக்க:  நவம்பர் மாதம் இந்த நாட்களில் வங்கிகள் செயல்படாது.. லிஸ்ட் இதோ!

இது ஒரு பக்கம் இருக்க சமீப காலமாகவே திமுக கூட்டணி கட்சிகளுக்கும், திமுகவிற்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்து வருகிறது. அதாவது ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என விசிகவின் ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார், அதே சமயம் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவை கலந்துக்கொள்ளும் படி தலைவர் திருமா ஆழைப்பு விடுத்திருந்தார். அப்போது கூட்டணியில் பிளவு ஏற்படும் என கருதப்பட்ட நிலையில், முதலமைச்சரை சந்தித்து பேசுவார்த்தை நடத்தப்பட்டு சமரசம் எட்டப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன் சாம்சங்க் தொழிலாளர்கள் போராட்டத்தின் போது திமுக கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவிற்கு எதிரான கருத்தை முன்வைத்தது. இப்படியான நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சி தரப்பில் ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் சார்பில் முதலமைச்சருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

 

Latest News