Tamilnadu Weather Alert: சென்னை புறநகர் உட்பட 15 மாவட்டங்களில் விடிய விடிய மழை இருக்கு.. வந்த புது அலர்ட்
சென்னை புறநகர் உட்பட 15 மாவட்டங்களில் நள்ளிரவில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, தேனி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முழுவதும் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புது அலர்ட்: சென்னை புறநகர் உட்பட 15 மாவட்டங்களில் நள்ளிரவில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, தேனி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், சென்னை, பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் இரவில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக வெளியான அறிவிப்பில், நேற்று (07-09-2024) காலை வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு பகுதி, இன்று (08-09-2024) காலை 05:30 மணி அளவில் மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுபெற்று, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 08:30 மணி அளவில் கலிங்கபட்டினத்திற்கு (ஆந்திரா) கிழக்கே 280 கீ.மீ, கோபால்பூற்கு (ஓடிசா) கிழக்கு-தென்கிழக்கே 230 கீ.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.
Also Read: “சித்தர் சொல்லிதான் பேசினேன்” அடித்துவிடும் மகா விஷ்ணு.. பரபர வாக்குமூலம்!
இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா – மேற்கு வங்காளம் கடற்கரை பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெறக்கூடும். மேலும் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 9 -ஆம் தேதி மாலை/இரவு வாக்கில் ஓடிசா மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள கடற்கரையை பூரி (ஓடிசா) – தீகா (மேற்கு வங்காளம்) இடையே கடக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.
அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்:
இன்று முதல் வரும் 14ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: இனி இந்த ஆவணம் இருந்தால் தான் ஆதார் கார்டு.. வந்தது மேஜர் அறிவிப்பு!
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
08.09.2024 மற்றும் 09.09.2024: மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
10.09.2024 முதல் 12.09.2024 வரை : மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.