5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamilnadu Weather Alert: மண்டையை பொளக்கும் வெயில்.. 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை..

மே மாதத்தில் வரும் அக்னி நட்சத்திரத்தின் போது வெயில் கொளுத்தி எடுக்கும் ஆனால் இந்த ஆண்டு மாறாக மே மாதம் முழுவதும் நல்ல மழை பதிவானது. ஜுன் மாதத்திலும் வெயிலின் தாக்கம் எதிர்ப்பார்த்ததை விட குறைவாகவே இருந்தது. ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைக்கிறது என்றே கூறலாம். பொதுவாக இந்த காலக்கட்டத்தில் 36 அல்லது 37 டிகிரி செல்சியஸ் ஒட்டியே வெயில் இருக்கும் ஆனால் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி வருகிறது.

Tamilnadu Weather Alert: மண்டையை பொளக்கும் வெயில்.. 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை..
கோப்பு புகைப்படம் (image courtesy: pixabay)
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 05 Sep 2024 19:12 PM

வானிலை நிலவரம்: ஆடி முடிந்து ஆவணி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுவாக இந்த காலக்கட்டத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படும். ஆனால் இந்த ஆண்டு தொடக்கம் முதல் வானிலை மிகவும் குழப்பமான நிலையில் தான் இருந்து வருகிறது. அதாவது மே மாதத்தில் வரும் அக்னி நட்சத்திரத்தின் போது வெயில் கொளுத்தி எடுக்கும் ஆனால் இந்த ஆண்டு மாறாக மே மாதம் முழுவதும் நல்ல மழை பதிவானது. ஜுன் மாதத்திலும் வெயிலின் தாக்கம் எதிர்ப்பார்த்ததை விட குறைவாகவே இருந்தது. ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைக்கிறது என்றே கூறலாம். பொதுவாக இந்த காலக்கட்டத்தில் 36 அல்லது 37 டிகிரி செல்சியஸ் ஒட்டியே வெயில் இருக்கும் ஆனால் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி வருகிறது.

மேலும் படிக்க: கண்மை டப்பா விழுங்கி ஒரு வயது குழந்தை உயிரிழப்பு.. சிவகங்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று மதுரையில் 40.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து, நாகையில் 39.1 டிகிரி செல்சியஸ், தஞ்சாவூரில் 39 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 38.3 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மினம்பாக்கத்தில் 36.5 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 36.1 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க, இன்று (05-09-2024) மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா-தெற்கு ஒரிசா கடற்கரை பகுதிகளில் ஒரு காற்றழுத்ததாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த இரண்டு தினங்களில் வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டில் மழை கொடுக்குமா என்றால் அது சந்தேகத்திற்கு உரியது தான். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திரா மற்றும் ஒரிசா இடையே நகரக்கூடும் என்பதால் தமிழ்நாட்டில் மழை இருக்காது. வறண்ட வானிலையே நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: படம் பார்க்க சென்ற ரசிகர்கள்.. பைன் போட்ட டிராபிக் போலீஸ்.. கோட் சம்பவம்!

ஆனால் வரும் 11 ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest News