Tamilnadu Powercut: தமிழகத்தில் இன்று முக்கிய இடங்களில் மின்தடை… ஏரியா வைஸ் லிஸ்ட் இதோ!
செப்டம்பர் 03ஆம் தேதியான இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மின்தடை செய்யப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான்.
இன்றைய மின்தடை: செப்டம்பர் 03ஆம் தேதியான இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மின்தடை செய்யப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும். இந்த நிலையில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மதியம் 2.00 மணிக்கு பின் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் கோவை, புதுக்கோட்டை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று (03.09.2024) காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை பராமாரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: ஒற்றை கை இருந்தாலும் தன்நம்பிக்கையுடன் சாதித்து காட்டிய மாணவன்.. கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்..
எங்கெல்லாம் மின்தடை:
சென்னை
அயப்பாக்கம் TNHB கட்டம் I முதல் III, ICF காலனி, அண்ணனூர், அத்திப்பேட்டை பகுதி, சின்ன கொலடி, TNHB 2394 குடியிருப்புகள், மேல் அயனம்பாக்கம், செல்லி அம்மன் நகர், குப்பம், அக்ரஹாரம், சென்னை புதிய நகரம், KSR நகர், ஈடன் அவென்யூ ஆகிய பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
திருச்சி:
முசிறி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக முசிறி OHT, அய்யம்பாளையம், வெள்ளூர், காமாட்சிப்பட்டி, தண்டலை, தண்டலைப்புத்தூர், மணமேடு, நாச்சியபுத்தூர், தும்பலம், சோலம்பட்டி, பெருமாள்பாளையம், மேட்டுப்பட்டி, கட்டப்பட்டி போன்ற பகுதிகளில் மின் தடை செய்யப்பட இருக்கிறது.
தேனி
ராசிங்காபுரம், பாராகான், சிலமலை, டி.ஆர்.புரம், எஸ்.ஆர்.புரம், சூலபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை செய்யப்பட உள்ளது.
விருதுநகர்
படிக்கசுவைத்தான்பட்டி – வன்னியம்பட்டி, கொட்டாங்குளம், வன்னியம்பட்டி, ராஜபாளையம் ரோடு, மம்சாபுரம், தொட்டிப்பட்டி – முத்துலிங்காபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை செய்யப்பட்ட உள்ளது.
தஞ்சாவூர்
திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி, வல்லம்புதூர், திருக்காட்டுப்பள்ளி, கல்லணை ஆகிய பகுதிகள் மின்சாரம் துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை
அன்னப்பண்ணை, அன்னவாசல், சிப்காட் ஆகிய துணை மின் நிலையத்தைச் சேர்ந்த பகுதிகள் முழுவதும் மின்தடை செய்யப்படுகிறது.
Also Read: 95.43 லட்சம் மக்கள் பயணம்.. மெட்ரோவில் அலைமோதும் கூட்டம்.
கோவை
எம்ஜிசி பாளையம் மின் நிலையத்தில் இருந்து செல்லும் பகுதிகளில் எம்ஜிசி பாளையம், பொன்னேகவுண்டர்புதூர், எம்.ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னபசெட்டிபுதூர், மண்ணிக்கம்பாளையம், கல்லிபாளையம், தொட்டியனூர் சில பகுதிகள், ஊரைக்கல்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.