5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

போதைப்பொருள் கடத்தல்.. கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்.. நடந்தது என்ன?

சென்னையில் கடந்த வாரம் கல்லூரில் அருகே இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், போலீசார் சோதனை மேற்கொண்டனர். மாணவர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொண்டனர். இதில் சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த குடியிருப்பில் நிகில் ஸ்ரீனிவாச கொண்டா (வயது 21) தெலங்கானாவை சேர்ந்த மாணவனையும் போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல்.. கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்.. நடந்தது என்ன?
கோப்பு புகைப்படம் (image courtesy: pixabay)
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 05 Sep 2024 22:40 PM

கல்லூரி மாணவன் தற்கொலை உயிரிழந்த சம்பவம்: சென்னை அருகே பொத்தேரியில் இயங்கி வரும் கல்லூரியில் பயின்று வரும் மாணவன் செவ்வாய்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கடந்த வாரம் கல்லூரில் அருகே இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், போலீசார் சோதனை மேற்கொண்டனர். மாணவர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொண்டனர். இதில் சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த குடியிருப்பில் நிகில் ஸ்ரீனிவாச கொண்டா (வயது 21) தெலங்கானாவை சேர்ந்த மாணவனையும் போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால் அந்த மாணவன் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. விசாரணைக்கு பின் நிகில் ஸ்ரீனிவாச கொண்டா வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அந்த மாணவன் செவ்வாய்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிகில் மீது எந்த தவறும் இல்லை என்றாலும், கல்லூரி நிர்வாகம் தரப்பில் பெற்றோருக்கு இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

Also Read: நாளை தமிழ்நாட்டில் இந்த மாவட்டங்களில் மின் தடை.. ஏரியா வைஸ் லிஸ்ட் இதோ..

இதனை தொடர்ந்து பெற்றோரும் நிகிலிடம் நடந்தது குறித்து கேட்டறிந்தனர். மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான நிகில் இரண்டு நாட்கள் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். பின் செவ்வாய்கிழமை இரவு அவரது அறையில் தற்கொலை செய்துக்கொண்டார். தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து அவரது உடல் தெலங்கானாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.


இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் தள பதிவில், “ விடியா திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் குறித்தும், இதனால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சீரழிவது குறித்தும் “தமிழ்நாட்டில் போதைபொருள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது; விடியா திமுக அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து, போதை பொருள் புழக்கம் தடுக்கவேண்டும்” என 2 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சுட்டிக்காட்டியும் எச்சரித்தும் வந்துள்ளேன்.

அப்போதே உரிய நடவடிக்கை எடுத்து போதைப்பொருள் புழக்கத்தை தடுத்திருந்தால் , இன்றைய தினம் மாணவர்கள் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி அவர்களது வாழ்க்கை சீரழியும் நிலை ஏற்பட்டு இருக்காது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் வீடுகளிலும் காவல்துறையினர் சோதனை மேற்கொண்ட செய்திகள் வந்துள்ளன.

இச்சோதனையின் ஊடாக, மாணவர் ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து, பெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வர சொல்லியதால் மன அழுத்தத்தில் தவறான முடிவெடுக்க முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி மிகவும் வருத்ததக்குரியது. இனியாவது இந்த விடியா திமுக அரசு காவல்துறை சுதந்திரமாக செயல்படச் செய்து போதை பொருளை தமிழகத்தில் அறவே இல்லாமல் ஒழித்திட்டு, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்காலத்தை பாதுகாத்திட விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Latest News