5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Deputy CM Udhayanidhi: துணை முதல்வராகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் பதவியேற்பு!

துணை முதல்வர் உதயநிதி: தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பல அமைச்சர்கள் நீக்கப்பட்டு, புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக தமிழகத்தின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நாளை பதவியேற்கிறார். நாளை பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் விழாவில் துணை முதல்வராக உதயநிதி பதவியேற்கிறார்.

Deputy CM Udhayanidhi: துணை முதல்வராகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை  பிற்பகல் பதவியேற்பு!
உதயநிதி ஸ்டாலின்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 28 Sep 2024 23:29 PM

தமிழ்நாடு துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நாளை பதவியேற்கிறார். விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்று சமீப காலமாகவே தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது. ஆனால், எப்போது என்று மட்டும் சஸ்பென்ஸாக இருந்து வந்தது. கடந்த 2019ஆம் ஆண்டு திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. 2021 சட்டமன்ற தேர்தலில் கருணாநிதி நின்ற சேப்பாக்ககம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

துணை முதல்வராகிறார் உதயநிதி ஸ்டாலின்

ஆனால், அவருக்கு உடனே அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இதனை அடுத்து கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட்டது.  இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தன.

முதல்வர் ஸ்டாலின அமெரிக்காவுக்கு செல்வதற்கு முன்பாக உதயநிதிக்கு துணை முதல்வர் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல்வர் ஸ்டாலினோ, வலுத்திருக்கிறது, பழுக்கவில்லை என்று கூறியிருந்தார்.

உதயநிதியை துணை முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், தொண்டர்கள் என பலரும் அவ்வப்போது குரல் எழுப்பி வந்தனர்.  முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 2009ஆம் ஆண்டு தனது மகன் மு.க.ஸ்டாலினை துணை முதல்வராக அறிவித்தார்.

Also Read: தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்.. யார் யாருக்கு என்ன பதவி?

அதே வழியில் உதயநிதி ஸ்டாலினும் துணை முதல்வராக அறிவிக்கப்பட உள்ளார் என்று திமுக வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்த நிலையில், இன்று அதேபோலவே உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர்  பதவி வழங்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழகத்தின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நாளை மாலை 3.30 பதவியேற்கிறார்.

நாளை நடைபெறும் விழாவில் உதயநிதி துணை முதல்வராக பதவியேற்கிறார். மேலும், உதயநிதிக்கு திட்டம், வளர்ச்சி துறை ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் வசம் இருந்த திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை தான் கூடுதலாக உதயநிதிக்கு ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, விளையாட்டுத்துறை அமைச்சராகவும் உதயநிதி ஸ்டாலின் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் மாற்றம்:

மேலும், தமிழக அமைச்சரவையில் மூன்று அமைச்சரவையில் நீக்கப்பட்டுள்ளனர். அதே வேளையில் அவர்களுக்கு பதில் நான்கு பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் இரண்டு புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமைச்சர்களாக இருந்த செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், கோவை செழியன், ராஜேந்திரன் ஆகிய புது முகங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது.

மேலும்,  செந்தில் பாலாஜி மற்றும் நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பொன்முடிக்கு உயர்கல்வித்துறையில் இருந்து வனத்துறையும் மாற்றப்பட்டுள்ளார். சுற்றுச்சூழல் அமைச்சரான மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்படுத்த நலத்துறை  மாற்றப்பட்டுள்ளது.

Also Read: சென்னையில் ரூ.6 லட்சத்திலே வீடு.. ஈஸியா வாங்கலாம்? மிஸ் பண்ணாதீங்க.. தமிழக அரசு அசத்தல் ஏற்பாடு!

உயர்க்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கு வனத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பனுக்கு பால்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுககு ஆதி திராவிடர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழிக்கு மனித வள மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. வனத்துறை அமைச்சராக இருந்த மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

Latest News