ஸ்விக்கியில் பணியாற்றி வந்த கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை.. வாடிக்கையாளர் கொடுத்த புகாரால் நேர்ந்த சோகம்..
இன்றைய காலக்கட்டத்தில் கணவன் மனைவி என இருவருமே வேலைக்கு சென்று வருகின்றனர். அலுவலகம் சென்று வரும்போதே மிகவும் சோர்வடைகிறார்கள். இதனால் வெளியே சென்று வீட்டிற்கு தேவையான பொருட்களை கூட வாங்க நேரமில்லாமல் போய்விட்டது. இவர்களின் சுமையை மேலும் குறைகும் வகையில் வீட்டு மளிகை பொருட்கள் கூட 10 நிமிடம் முதல் டோர் டெலிவரி செய்யும் வகையில் பல செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது.
மளிகை பொருள் டெலிவரியின் போது வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பெண் கொடுத்த புகாரால் போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான டெலிவரி பாய் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போன்ற பெரு நகரில் மட்டுமல்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் உணவு டெலிவரிக்காக பல செயலிகள் செயலபாட்டில் உள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டில் இருந்த போது இது போன்ற செயலிகள் மக்களிடையே பிரபலமடையத் தொடங்கியது. அதனை தொடர்ந்து இரவு நேரம் என 24 மணி நேரத்திற்கு உணவு டெலிவரி செய்யவும் தொடங்கப்பட்டது.
இன்றைய காலக்கட்டத்தில் கணவன் மனைவி என இருவருமே வேலைக்கு சென்று வருகின்றனர். அலுவலகம் சென்று வரும்போதே மிகவும் சோர்வடைகிறார்கள். இதனால் வெளியே சென்று வீட்டிற்கு தேவையான பொருட்களை கூட வாங்க நேரமில்லாமல் போய்விட்டது. இவர்களின் சுமையை மேலும் குறைகும் வகையில் வீட்டு மளிகை பொருட்கள் கூட 10 நிமிடம் முதல் டோர் டெலிவரி செய்யும் வகையில் பல செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது.
மக்களும் அந்த வசதிகளை பயன்படுத்தி வருகின்றனர். அப்படி உணவு டெலிவரி செய்யும் செயலியாக இருந்த ஸ்விக்கியில் வீட்டு மளிகை பொருட்களும் டெலிவரி செய்யும் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கு.. தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..
அந்த வகையில், கொரட்டூர் என்.எஸ்.சி போஸ் தெருவைச் சேர்ந்த நிஷா என்பவர், கடந்த 11ம் தேதி ஆன்லைன் டெலிவரி ஆப்பில் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை நிஷா என்ற பெண் ஆர்டர் செய்திருந்தார். பகுதி நேரமாக ஆன்லைன் டெலிவரி செய்து வரும் சென்னை கொளத்தூரை சேர்ந்த பவித்ரன் (19) என்ற கல்லூரி மாணவர் டெலிவரி செய்துள்ளார். அப்போது நிஷா செயலில் பதிவிட்ட முகவரியும், வீட்டின் முகவரியும் வெவ்வேறாக இருந்ததால் பவித்ரன், நிஷாவிடம் முறையிட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பொருட்களை டெலிவரி செய்து விட்டு பவித்ரன் சென்று விட்டார். பின், ஆன்லைன் டெலிவரி செயலியில் பவித்ரன் மீது நிஷா புகார் அளித்ததால், பவித்ரன் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனால் விரக்த்தியடைந்த பவித்ரன், கடந்த 13ம் தேதி நிஷாவின் வீட்டிற்கு சென்று, அவர் ஜன்னல் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்துள்ளார்.
மேலும் படிக்க: சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் பயணிகள் ரயில் இயக்கத்தில் மாற்றம்.. எந்தெந்த ரயில்? நோட் பண்ணிகோங்க..
அப்போது கண்ணாடி துகள்கள் பட்டதில் நிஷாவின் ஐந்து வயது ஆண் குழந்தைக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு மிகவும் அதிர்ந்து போயுள்ளார் நிஷா. உடனே துபாயில் பணிபுரிந்து வரும் நிஷாவின் கணவர், இச்சம்பவம் குறித்து தகவலறிந்து, விமான மூலம் சென்னை வந்து, கடந்த 14ம் தேதி கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில், கொரட்டூர் போலீசார் நேற்று முன்தினம் பவித்திரனை நேரில் அழைத்து விசாரித்தனர். கல்லூரி மாணவர் என்பதால், பவித்ரனை எச்சரித்து, சிறிய வழக்கு பதிவு செய்த கொரட்டூர் போலீசார், நீதிமன்றத்தில் அபராதம் கட்ட அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த பவித்ரன் நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கொளத்தூர் போலீசார், பவித்ரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
(disclaimer: மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)