5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Chennai Metro Trains: சென்னையில் வெளியே போறீங்களா? – போக்குவரத்து சேவையில் மாற்றம்!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணையை பயன்படுத்தி சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையின் மிக முக்கியமான போக்குவரத்து தேவையாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. விமான நிலையம் முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரையும், பரங்கிமலை முதல் விம்கோ நகர் வரை இரண்டு வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

Chennai Metro Trains: சென்னையில் வெளியே போறீங்களா? – போக்குவரத்து சேவையில் மாற்றம்!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 02 Oct 2024 13:13 PM

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணையை பயன்படுத்தி சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “விடுமுறை தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணையை பின்பற்றி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். அதேபோல் காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் 10 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைப்பட்ட மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நெரிசல் இல்லாத நேரங்களான இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Iran – Israel War: ஈரான் – இஸ்ரேலுக்கு இடையே என்னதான் பிரச்னை? போர் நடக்க என்ன காரணம்.. முழு விவரம்!

சென்னையின் மிக முக்கியமான போக்குவரத்து தேவையாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. விமான நிலையம் முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரையும், பரங்கிமலை முதல் விம்கோ நகர் வரை இரண்டு வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோவில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் கூட மெட்ரோ ரயில்களில் 92 லட்சம் பேர் பயணித்ததாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்திருந்தது. கடந்த ஜனவரி மாதத்தில் 84 லட்சம் ஆக இருந்த இந்த எண்ணிக்கை 9 மாதங்களில் 12 லட்சம் அதிகரித்துள்ளது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. பாதுகாப்பான மற்றும் நம்பகத்தன்மையுடன் இருப்பதால் மெட்ரோ ரயில் அனைவராலும் விரும்பப்படும் போக்குவரத்து சாதனமாக உள்ளது. இதில் பயண அட்டைகளை பயன்படுத்தியும், டிஜிட்டல் முறையிலும் டிக்கெட்டுகளைப் பெற்று அதன் மூலம் தள்ளுபடியும் பெறலாம். மேலும் பண பரிவர்த்தனை செயலி மற்றும் வாட்சப் மூலமாகவும் டிக்கெட்டுகளை நாம் பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மின்சார ரயில் சேவை

சென்னையின் போக்குவரத்தின் மற்றொரு வேராக திகழும் மின்சார ரயில்களும் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை – தாம்பரம், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் மின்சார ரயில் சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினசரி இயக்கப்பட்டும் 670 ரயில் சேவை, 630 சேவையாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Thanjavur: கொலுசு அணிவித்தால் குழந்தை வரம் அருளும் காளிகா பரமேஸ்வரி!

கூடுதல் சிறப்பு பேருந்துகள்

சென்னையைப் பொறுத்தவரை இன்று விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் கடற்கரை, பூங்காக்கள், தியேட்டர்கள், கோயில்கள் என பல்வேறு இடங்களுக்கு செல்வது வழக்கம். இதனை முன்னிட்டு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் முக்கிய வழித்தடங்களில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று பொது விடுமுறை என்பதாலும், பள்ளி மாணவ மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டதாலும் அனைத்து சுற்றுலா தலங்களிலும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம், கோவை குற்றாலம், திருச்செந்தூர், பாபநாசம் என தமிழகத்தின் அனைத்து சுற்றுலா தளங்களிலும் மக்கள் கூட்டம் காணப்படுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை சமாளிக்கும் போரிட்டு தமிழ்நாடு முழுவதும் தமிழக அரசு சார்பில் பொதுமக்களின் எண்ணிக்கைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

 

Latest News