5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Vande Bharat: தமிழ்நாட்டுக்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள்.. எங்கெல்லாம் தெரியுமா?

இந்தியாவை பொறுத்தவரை பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்து சாதனமாக ரயில்கள் உள்ளன. பாசஞ்சர் ரயில்கள், எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட், ராஜ்தானி, அந்தோதியா, தேஜஸ் என விதவிதமான பெயர்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடைசியாக அறிமுகம் செய்யப்பட்டது வந்தே பாரத் ரயில்கள்.

Vande Bharat: தமிழ்நாட்டுக்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள்.. எங்கெல்லாம் தெரியுமா?
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 27 Aug 2024 18:41 PM

வந்தே பாரத் ரயில்கள்: தமிழகத்திற்கு கூடுதலாக இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 2 ரயில்களுக்கான சேவைகளின் தொடக்க விழா இம்மாத இறுதியில் நடக்க இருப்பதாகவும் தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியால் ரயல் பணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்து சாதனமாக ரயில்கள் உள்ளன. பாசஞ்சர் ரயில்கள், எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட், ராஜ்தானி, அந்தோதியா, தேஜஸ் என விதவிதமான பெயர்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடைசியாக அறிமுகம் செய்யப்பட்டது வந்தே பாரத் ரயில்கள்.

Also Read: MohanLal: பாலியல் புகாரால் தொடர் நெருக்கடி.. மோகன்லால் உட்பட 17 பேர் ராஜினாமா!

பயணிகள் பயண நேரத்தை குறைக்கும் பொருட்டு அறிமுகம் செய்யப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் செயல்பாட்டில் இருந்து வருகிறது. முதலில் நீலம், வெள்ளை நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரயில்கள் பின்னர் காவி நிறத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வந்தே பாரத் ரயிலின் தரம் பலமுறை சர்ச்சைக்குள்ளானது. சிறிய விலங்குகள் முட்டினால் அதன் முன்பகுதி அப்பளம்போல நொறுங்கி விடுவது தான் காரணம். இப்படியான வந்தே பாரத் ரயில்களில் டிக்கெட் கட்டணமும் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இருக்கைகள் மட்டுமே கொண்ட இந்த ரயிலில் திருநெல்வேலியில் இருந்து சென்னை வர சேர் கார் சீட் ரூ.1665 ஆகவும், எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் ரூ.3055 ஆகவும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனுடன் காலையில் காஃபி, அதன்பிறகு காலை மற்றும் மதியம் உணவும் வழங்கப்படும். மேலும் படிக்க தினசரி பேப்பர், வாட்டர் பாட்டில் ஆகியவையும் வழங்கப்படுகிறது.

Also Read: Viral Video : 7,000 அடி உயரம்.. 102 வயதில் ஸ்கை டைவிங் செய்த மூதாட்டி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

ஏற்கனவே தமிழ்நாட்டில் இருந்து சென்னை முதல் மைசூர் வரையும், சென்னை முதல் கோவை வரை,  சென்னை முதல் விஜயவாடா வரை,  சென்னை முதல் நெல்லை வரையிலான வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் மதுரை முதல் பெங்களூரு வரையும் மற்றும் சென்னை முதல் நாகர்கோவில் வரையும் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இம்மாத இறுதியில் இதற்கான சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் எனவும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் நாகர்கோயில்- சென்னை இடையே ஏற்கனவே விடுமுறை காலங்களில் இயக்கப்பட்ட சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை பொதுமக்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த ரயில் சென்னையில் இருந்து காலை 5 மணிக்கும், நாகர்கோயிலில் இருந்து மதியம் 3 மணிக்கும் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Latest News