ஆன்லைனில் ஆர்டர் போட்ட நூடுல்ஸ்.. சமைத்து சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு.. திருச்சியில் அதிர்ச்சி!
திருச்சியில் ஆன்லைனில் நூடுல்ஸ் வாங்கி வீட்டில் சமைத்து சாப்பிட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லையின் காரமான சைனா நூடுல்ஸை ஆர்டர் போட்டு சிறுமி வீட்டில் சமைத்து சாப்பிட்டு இருக்கிறார். இரவில் சாப்பிட்டு உடனே தூங்க சென்றார். மறுநாள் காலை அவர் உயிரிழந்துள்ளார்.
நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு: திருச்சியில் ஆன்லைனில் நூடுல்ஸ் வாங்கி வீட்டில் சமைத்து சாப்பிட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜூடி மெயில்ஸ். இவர் ரயில்வே ஊழியராக வேலை செய்து வருகிறது. இவர் தனது குடும்பத்துடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவரது மகள் ஸ்டெபி ஜாக்குலின் (15). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி ஸ்டெபி நூடுல்ஸ் சாப்பிடுவது ரொம்ப பிடிக்கும் என்பதால் அடிக்கடி இதனை சாப்பிட்டு வந்திருக்கிறார். இதனால் சில நேரங்களில் கடைகளில் வாங்கியும், வீட்டில் சமைத்து சாப்பிட்டு இருக்கிறார். இந்த நிலையில் தான் கடந்த சனிக்கிழமை இரவு அவர் வழக்கம் போல் ஆன்லைனில் நூடுல்ஸ் ஆர்டர் செய்திருக்கிறார். அதுவும் காரமான சைனா நூடுல்ஸை ஆர்டர் செய்திருக்கிறார்.
Also Read: விஜய் மாநாடு தள்ளிப்போகிறதா? விளக்கம் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்!
ஆர்டர் செய்த சில நிமிடங்களிலேயே நூடுல்ஸ் வந்துள்ளது. அன்றைய தினம் சிறுமி வீட்டிலேயே இரவு நூடுல்ஸ் செய்து சாப்பிட்டு தூங்கி இருக்கிறார். மறுநாள் காலை அவர் நீண்ட நேரமாக எழாமல் இருந்ததாக கூறப்படுகிறரு. இதனை அடுத்து, அவரது பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பிரேத பரிசோதனையில் பகீர்
அங்கு மருத்தவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்டேபியின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது, சிறுமி நூடுல்ஸ் சாப்பிட்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதிப்படுத்தி உள்ளார்.
முன்னதாக, உயிரிழந்ந சிறுமியின் குடும்பத்தினர் பிரேத பரிசோதனைக்காக உடலை தர உறுவினர்கள் மறுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், புகார் வந்துள்ளதால் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என போலீசார் கூறினர். இதனால் சிறிது நேரம் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் போலீசாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் பிரேத பரிசோதனையில் சிறுமி நூடுல்ஸ் சாப்பிட்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
நூடுல்ஸ் சாப்பிடுவதை தவிருங்கள்:
இன்றைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நூடுல்ஸை விரும்பி சாப்பிடுகின்றனர். இதை அடிக்கடி சாப்பிடுவதால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். ஏனென்றால் இந்த நூடுல்ஸில் எந்த ஒரு சத்துக்களும் கிடையாது. இதில் சோடியம் தான் அதிகளவில் உள்ளது. இது ரத்த அழுதத்தை அதிகரித்து உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம். எனவே, நூடுல்ஸ் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.