5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Palani: 40 நாட்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தம்.. பழனி செல்லும் பக்தர்கள் அதிர்ச்சி!

Arulmigu Dhandayuthapaniswamy Temple: பழனிக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலான ரோப் கார் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரோப் கார் சேவையானது  காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மூன்று நிமிடங்களில் நாம் மலையடிவாரத்தில் இருந்து பழனி மலை முருகன் கோயிலை அடையலாம். ஒவ்வொரு ரோப் காரிலும் நான்கு பேர் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.  இதற்காக கட்டணமாக ஒரு வழி பயணமாக ஒருவருக்கு ரூபாய் 15 வசூலிக்கப்படுகிறது.

Palani: 40 நாட்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தம்.. பழனி செல்லும் பக்தர்கள் அதிர்ச்சி!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 02 Oct 2024 07:45 AM

பழனி தண்டாயுதபாணி கோயில்: பழனி முருகன் கோயிலில் 40 நாட்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள் உள்ளது அனைவரும் அறிந்த விஷயம். அதில் 3 ஆம் படை வீடான பழனி திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு செல்ல பேருந்து, ரயில் வசதிகளும் உள்ளது. நாள்தோறும் உள்ளூர், வெளியூர், வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தருகின்றனர். குறிப்பாக தைப்பூசம், பங்குனி உத்திரம், ஆவணி திருவிழா, கார்த்திகை மாதம் உள்ளிட்ட விழாக்காலங்களில் எல்லாம் லட்சக்கணக்கில் பக்தர்கள் பழனிக்கு வருகை தருவார்கள். இதனால் கோயிலின் அனைத்து பணிகளும் அறநிலையத்துறை மூலமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Also Read:IND vs BAN: இந்தியா – வங்கதேச டெஸ்டில் குவிந்த பல சாதனைகள்.. இதுபோன்ற ரெக்கார்டை படைத்த முதல் அணி!

பழனியில் தண்டாயுதபாணியாக பக்தர்களுக்கு ஆண்டி கோலத்தில் முருகன் அருள்பாலிக்கிறார். இந்த மலையில் படிக்கட்டுகள் வழியாக பக்தர்கள் செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் ரோப் கார், விஞ்ச் சேவையும் பக்தர்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவி வருகிறது. இப்படியான நிலையில் வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக பழனியில் ரோப் கார் சேவை 40 நாட்களுக்கு செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 7 ஆம் தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை ரோப் கார் சேவை இருக்காது. எனவே பக்தர்கள் சிரமத்தைப் பொறுத்துக்கொண்டு படிப்பாதை மற்றும் விஞ்ச் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழனிக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலான ரோப் கார் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரோப் கார் சேவையானது  காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மூன்று நிமிடங்களில் நாம் மலையடிவாரத்தில் இருந்து பழனி மலை முருகன் கோயிலை அடையலாம். ஒவ்வொரு ரோப் காரிலும் நான்கு பேர் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.  இதற்காக கட்டணமாக ஒரு வழி பயணமாக ஒருவருக்கு ரூபாய் 15 வசூலிக்கப்படுகிறது. அதே சமயம் சிறப்பு பயண கட்டணமாக ரூபாய் 50 வசூலிக்கப்படுகிறது. பிற்பகல் 1:30 மணி முதல் இரண்டு 30 மணி வரை ரோப் கார் சேவை உணவு இடைவேளைக்காக நிறுத்தப்படுவது வழக்கம். நாள்தோறும் இந்த சேவையை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயன்படுத்தி பயன்பெற்று வருகின்றனர். 40 நாட்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தப்படுவது நிச்சயம் பக்தர்கள் வருகையை குறைக்கும் என உள்ளூர் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் பழனியில் 2 நாட்கள் உலகத்தமிழ் முருகன் மாநாடு தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை சார்பில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இதற்காக உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தந்தனர். இதனிடையே பழனியில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி 16 ஆண்டுகளுக்குப் பின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மிகவும் விமரிசையாக மிகப்பெரிய பொருட்செலவில் நடைபெற்ற நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்திற்கு பிறகு பழனிக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். இப்படியான நிலையில் ராஜகோபுரத்தின் உச்சியில் சேதம் ஏற்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read:Chennai: சென்னையில் பட்டினியால் வடமாநில தொழிலாளி மரணம்.. பொதுமக்கள் அதிர்ச்சி

கோபுரத்தின் 2 பக்கமும் கொம்பு போன்ற அமைப்பில் ஒருபக்கம் உடைந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்து கோயில் நிர்வாகத்திடம் புகாரளித்தனர். இதன் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. பலரும் அறநிலையத்துறையினருக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பழனி கோயில் நிர்வாகம் ஸ்தபதி குழுவினரிடமும், தொழில்நுட்ப குழுவினரிடம் விசாரணை நடத்தி வருகிறது. கோபுரத்தில் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்த பிறகு உண்மையான விவரம் தெரிய வரும். பொதுவாக பருவநிலை மாற்றங்கள் காரணமாக கோயில் கோபுரங்கள், கட்டடங்கள் சேதமடைவதும், விரிசல் ஏற்படுவதும் சகஜமான ஒன்று தான். ஆனால் 2 ஆண்டுகள் மட்டுமே திருக்கோயில் பணிகள் முடிந்துள்ள நிலையில் அதற்குள் சேதம் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை சரிசெய்ய கோயில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், இதனைப் பார்த்து பக்தர்கள் கவலைக்கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Latest News