5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்.. கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொது துறை நிறுவன பணியாளர்கள், ராணுவத்தினர் ஆகியோரின் குழந்தைகளுக்காக கேந்திரிய வித்யாலயா பள்ளி உருவாக்கப்பட்டு மத்திய அரசால். நடத்தப்பட்டு வருகிறது. காலி இடங்கள் இருந்தால், பொதுத் தரப்பினருக்கும் இடம் வழங்கப்படுகிறது. தமிழக முழுவதும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலும் கேந்திரிய வித்யாலயா பள்ளி உள்ளது.

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்.. கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..
கோப்பு புகைப்படம்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 29 Aug 2024 13:51 PM

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் கைது: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 8 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் ராமச்சந்திர சோனி கைது செய்யப்பட்டுள்ளார். போக்ஸோ உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொது துறை நிறுவன பணியாளர்கள், ராணுவத்தினர் ஆகியோரின் குழந்தைகளுக்காக கேந்திரிய வித்யாலயா பள்ளி உருவாக்கப்பட்டு மத்திய அரசால். நடத்தப்பட்டு வருகிறது. காலி இடங்கள் இருந்தால், பொதுத் தரப்பினருக்கும் இடம் வழங்கப்படுகிறது. தமிழக முழுவதும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலும் கேந்திரிய வித்யாலயா பள்ளி உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க கூடிய இந்த பள்ளியில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்தநிலையில் இந்த பள்ளியில் பணிபுரியும் ஆர்ட் கற்று கொடுக்கும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திர சோனி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் பாலியல் ரீதியான சீண்டல் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார். தலைமை ஆசிரியர் நடத்திய விசாரணையில் ஆசிரியர் ராமச்சந்திர சோனி பல மாணவிகளிடம் இது போன்று பாலியல் ரீதியான சீண்டல்களை மேற்கொண்டதாக தெரிய வந்தது.

மேலும் படிக்க: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. 4 ஆம் தேதி வரை பொளக்கப்போகும் மழை..

தொடர்ந்து மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் தலைமை ஆசிரியர் விசாரித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் ராமச்சந்திர சோனியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து தலைமை ஆசிரியர் மாவட்ட குழந்தை நல அதிகாரிக்கு தகவல் கொடுக்க தகவலின் பெயரில் விசாரித்த அதிகாரி நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பெயரில் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆஷா ஜவகர் தலைமையில் போலீசாரின் விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணையில் ஆசிரியர் ராமச்சந்திர சோனி பல்வேறு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் ஆசிரியர் ராமச்சந்திர சோனி ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் வேலை செய்ததாகவும் மேலும் தற்போது நாகர்கோவிலில் உள்ள பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு ஆர்ட் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியராகவும் பணிபுரிந்து வந்தது தெரிய வந்தது.

மேலும் படிக்க:  அதிக சத்துக்கள் நிறைந்த பாசுமதி அரிசி.. மூளை ஆரோக்கியத்திற்கு சிறந்தது!

மேலும் இவர் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் உறுதிப்படுத்தப்பட்டது. இது குறித்து உடனே குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பெயரில் ஆசிரியர் மீது போக்சோ உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். நாகர்கோவிலில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest News