Chennai Powercut : சென்னையில் இந்த பகுதிகளுக்கு இன்று மின்தடை.. லிஸ்ட் இதோ!
Area List : சென்னையில் இன்று முக்கிய இடங்களில் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, சின்மயா நகர், சேப்பாக்கம் - திருவல்லிகேணி, வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாதனங்கள் பயன்படுத்த முடியாது.
சென்னையில் இன்று முக்கிய இடங்களில் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, சின்மயா நகர், சேப்பாக்கம் – திருவல்லிகேணி, வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாதனங்கள் பயன்படுத்த முடியாது. தமிழகம் முழுவதும் உள்ள இந்த மின் இணைப்புகளுக்கான மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடர்பான அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள் செய்து வருகின்றன. தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் எண்ணிக்கை 3.32 கோடியாக உள்ளது.
இதையும் படிங்க : Ration Card : ரேஷன் அட்டை தாரர்களுக்கு குட் நியூஸ்.. அக்டோபர் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
இவை அனைத்திற்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 2 மாதத்திற்கு ஒருமுறை பயன்பாட்டிற்கு ஏற்ப மின் கட்டணம் வசூலிக்கிறது. இதற்கிடையில் மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்க மின்வாரியம் சார்பில் அடிக்கடி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனர்.
மின்தடை:
ஒவ்வொரு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதியில் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும். மின்தடை குறித்த செய்திகள் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் நிலையில், மக்கள் தங்கள் பணிகளை எளிதாக திட்டமிட்டு முடித்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : OnePlus Nord CE4 Lite : ரூ.3,000 தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்பட உள்ள ஒன்பிளஸ் நோட் சிஇ4 லைட்.. முழு விவரம் இதோ!
வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் குறிப்பிட்ட பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு 5 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் செபடம்பர் 24 ஆம் தேதியான இன்று, சென்னையில் முக்கிய இடங்களில் மின் தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, சின்மயா நகர், சேபாக்கம், திருவல்லிகேணி, வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
எந்தெந்த ஏரியா?
சின்மயா நகர்:
சாய் நகர் இணைப்பு, காளியம்மன் கோயில் தெரு, சின்மயா நகர் பகுதி, மேற்கு நடேசன் நகர், பச்சையம்மன் கோயில் தெரு, கங்கையம்மன் கோயில் தெரு, இளங்கோ நகர் இணைப்பு, சாய்பாபா காலனி, ரத்னா நகர், தாராசந்த் நகர், எல்&டி காலனி, சிஆர்ஆர் புரம், சாய் நகர், நடேசன் நகர், விநாயகம் அவென்யூ, கம்பர் தெரு, காந்தி தெரு, ராகவேந்திரா காலனி, வாரியார் தெரு, இந்திரா நகர், ராஜீவ் காந்தி தெரு, கண்ணகி தெரு, கிரஹா லட்சுமி அபார்ட்மெண்ட், சஞ்சய் காந்தி நகர், வாயுபுத்திர தெரு, இளங்கோ நகர், தெற்கு பாலாம்பாள் நகர், தங்கல் தெரு ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : Bank Holiday : அக்டோபர் மாதத்தில் 9 நாட்கள் வங்கிகள் செயல்படாது.. முழு விவரம் இதோ!
மேலும், ரெட்டி தெருவின் ஒரு பகுதி, பள்ளி தெரு, ஜெயின் அபார்ட்மெண்ட், கிருஷ்ணா நகர் 4வது தெரு, பாலாஜி நகர், எஸ்பிஐ காலனி I, II, & III, சாய் நகர், மேட்டுக்குப்பம், புவனேஸ்வரி நகர் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
சேப்பாக்கம் – திருவல்லிகேணி:
திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா சாலை, எல்லிஸ் சாலை, எல்லிஸ்புரம், அண்ணாசாமி தெரு, தயாசாஹிப் தெரு, பங்காரு நாயக்கன் தெரு, பாலமுத்து தெரு, சின்னதம்பி தெரு, முக்தர்நிஷா பேகம் தெரு, பச்சையப்பன் தெரு, நாராயண நாயக்கன் தெரு, பாபர் கான் தெரு, வல்லப அக்ரகாரம் தெரு , அப்பாவு தெரு, திப்பு சாகிப் தெரு, உன்னிஸ் அலி தெரு, குலாம் முத்து தெரு, மேயர் சிட்டிபாபு தெரு, காமராஜர் சாலை, நாகப்பன் தெரு, தௌலத்கான் தெரு, வெங்கடாசலம் தெரு, மசூதி தெரு ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : Viral Video : ரயிலின் அப்பர் பர்த்தில் இருந்து எட்டி பார்த்த பாம்பு.. பதறிப்போன பயணிகள்.. அடுத்து நடந்தது என்ன?
வில்லிவாக்கம்:
சிட்கோ நகர் (1 முதல் 10வது பிளாக்), அம்மன் குட்டை, நேரு நகர், சிட்கோ தொழில்துறை பகுதி, திரு நகர், வில்லிவாக்கம் சுற்றுப்புறம், பாபா நகர், ராஜமங்கலம் மெயின் ரோடு, வடக்கு & தெற்கு ஜெகநாதன் நகர், தெற்கு உயர்நீதிமன்ற காலனி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.