5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Chennai: சென்னையில் பட்டினியால் வடமாநில தொழிலாளி மரணம்.. பொதுமக்கள் அதிர்ச்சி

தமிழ்நாட்டிற்கு வேலைக்காக வடமாநில தொழிலாளர்கள் வருகை தருவது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்னை மற்றும் பிற மாவட்டங்களுக்கு கும்பல் கும்பலாக வருகை தருகின்றனர். குறைந்த கூலி, விடுமுறை எடுக்காமல் வேலை செய்வதாலும் வடமாநில தொழிலாளர்களுக்கு அதிகளவில் மவுசு உள்ளது.

Chennai: சென்னையில் பட்டினியால் வடமாநில தொழிலாளி மரணம்.. பொதுமக்கள் அதிர்ச்சி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் (கோப்பு புகைப்படம்)
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 02 Oct 2024 07:15 AM

வடமாநில தொழிலாளர் உயிரிழப்பு: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளி ஒருவர் பசியால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிற்கு வேலைக்காக வடமாநில தொழிலாளர்கள் வருகை தருவது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்னை மற்றும் பிற மாவட்டங்களுக்கு கும்பல் கும்பலாக வருகை தருகின்றனர். குறைந்த கூலி, விடுமுறை எடுக்காமல் வேலை செய்வதாலும் வடமாநில தொழிலாளர்களுக்கு அதிகளவில் மவுசு உள்ளது. இதனிடையே சென்னை மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 11 பேர் கடந்த மாதம் விவசாய வேலைக்காக சென்னைக்கு வருகை தந்துள்ளனர். சென்னையை அடுத்த பொன்னேரியில் மூன்று நாட்கள் வேலை முடிந்த பிறகு சொந்த ஊருக்கு செல்வதற்காக கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துள்ளனர்.

கிட்டத்தட்ட மூன்று நாட்கள் அதாவது 16ஆம் தேதி காலை வரை சென்னை ரயில் நிலைய பிளாட்பார்மில் தங்கி இருந்த இவர்களில் ஐந்து பேர் உணவு இல்லாமல் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல்துறையினர் ஐந்து பேரையும் மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் சக தொழிலாளர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் 5 பேரும் மேற்குவங்க மாநிலம் மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மேன்குர்ல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.

Also Read: Iran Attack Israel: இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா.. அதிபர் ஜோ பைடன் போட்ட உத்தரவு!

சமர்கான், மாணிக் கோரிக், சத்யா பண்டிட், ஆசித் பண்டிட், கோனாஸ் மிஸ்மித் என அந்த 5 தொழிலாளர்களுக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தனர். இவர்களின் நான்கு பேர் சில தினங்களுக்கு முன்பு சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். ஆனால் தொடர் சிகிச்சையில் இருந்த சமர்கான் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் வட மாநில தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

35 வயதாகும் சமர்கானுக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளதாக கூறப்படுகிறது. வறுமையில் வாடும் குடும்பத்தின் பசியை போக்க கிடைத்த வேலையை செய்து வந்த அவர் சென்னை சென்றால் ஓரளவுக்கு பணம் ஈட்டலாம் என்று வந்ததாக சொல்லப்படுகிறது. இதனிடையே சென்னை வந்த சமர்கானின் குடும்பத்தினர் அவர் உடலை பெற வழி தெரியாமல் தவித்துள்ளனர். அவர்களுக்கு தன்னார்வலர்கள் சிலர் உதவிக்கரம் நீட்டி உள்ளனர்.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த அமைச்சர் கீதா ஜீவன் வட மாநில தொழிலாளர்கள் பட்டினியோடு இருப்பதை யாரும் அறிந்து இருந்தால் நிச்சயம் உதவி இருப்பார்கள் என்றும், இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது வருந்தத்தக்க விஷயம் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வட மாநிலங்களில் இருந்து வேலை தேடி தமிழ்நாட்டிற்கு வரும் தொழிலாளர்கள் ஒப்பந்ததாரர்களை நம்பியே இங்கு வருகின்றனர். அவர்களுக்கு சரியான வேலை, பணம், உணவு மற்றும் இருப்பிடம் ஆகியவற்றை ஒப்பந்ததாரர்கள் உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: Mark Zuckerberg : 200 மில்லியன் டாலர் சொத்து.. உலகின் 4வது பணக்காரராக உருவெடுத்த மார்க் ஜூக்கர்பெர்க்!

தமிழ்நாட்டில் யாரும் பட்டினியோடு இருந்து விடக்கூடாது என இலவச அரிசி, மலிவு விலையில் உணவு வழங்கும் அம்மா உணவகம் என பல வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இங்கு வட மாநில தொழிலாளர் ஒருவர் பட்டினியால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் ஏற்படாமல் தொழிலாளர் நலத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் நேரில் சென்று சமர்கான் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதுமட்டுமல்லாமல் அவரது உடலை விமானத்தில் கொண்டு செல்ல தன்னுடைய சொந்த பணத்தில் இருந்து ரூ.60 ஆயிரம் வழங்கினார்.

Latest News