5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Special Buses: ஊருக்கு போற ப்ளான் இருக்கா? 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்து இயக்க திட்டம்.. முழு விவரம்..

ரயில் பயணத்தில் மின்பதிவு அவசியம் என்பதால் கடைசி நேரம் ஊருக்கு செல்பவர்கள் பேருந்தில் பயணம் மேற்கொள்கின்றனர். மக்களின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தரப்பிலும் பல்வேறு வசதிகள் செய்து தரப்படுகிறது. அதேபோல் விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்கள், பண்டிகை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வார இறுதி நாட்கள் மற்றும் காலாண்டு விடுமுறை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Special Buses: ஊருக்கு போற ப்ளான் இருக்கா? 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்து இயக்க திட்டம்.. முழு விவரம்..
கோப்பு புகைப்படம்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 26 Sep 2024 11:22 AM

வார இறுதி நாட்கள் மற்றும் காலாண்டு விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தரப்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மக்கள் ஒரு இடத்தில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு செல்ல பெருந்து பயணத்தையே நம்பியுள்ளனர். ரயில் பயணத்தில் மின்பதிவு அவசியம் என்பதால் கடைசி நேரம் ஊருக்கு செல்பவர்கள் பேருந்தில் பயணம் மேற்கொள்கின்றனர். மக்களின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தரப்பிலும் பல்வேறு வசதிகள் செய்து தரப்படுகிறது. அதேபோல் விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்கள், பண்டிகை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வார இறுதி நாட்கள் மற்றும் காலாண்டு விடுமுறை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ” 27/09/2024 (வெள்ளிக்கிழமை) 28/09/2024 (சனிக்கிழமை) 29/09/2024 (ஞாயிறு) வார விடுமுறை மற்றும் பள்ளிகள் காலாண்டு விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி. கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி. கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 27/09/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 395 பேருந்துகளும், 28/09/2024 (சனிக்கிழமை) 345 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 27/09/2024 வெள்ளிக் கிழமை அன்று 70 பேருந்துகளும் 28/09/2024 சனிக்கிழமை அன்று 70 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மற்றும் பெங்களூர். திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 27/09/2024 அன்று 20 பேருந்துகளும் 28/09/2024 அன்று 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பணி சுணக்கமா? லிப்ஸ்டிக் பிரச்னையா? சென்னை மேயர் – டபேதார் சிக்கல் என்ன? முழு விவரம்!

இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 12,691 பயணிகளும் சனிக்கிழமை 5,186 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 7,790 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள

இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே. பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: எப்போதும் திருநீறுடன் இருக்கும் பிரக்ஞானந்தா.. என்ன காரணம் தெரியுமா?

தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளியில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 19ஆம் தேதி முதல் செப்டம்பர் 27ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற்றது. 6 முதல் 10ஆம் வகுப்புக்கு தேர்வு நேரம் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையும், 7ஆம் வகுப்புகளுக்கு மதியம் 1.15 மணி முதல் மாலை 3.15 மணி வரையும், 8ஆம் வகுப்புகளுக்கு காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையும், 9ஆம் வகுப்புகளுக்கு மதியம் 1.15 மணி முதல் மாலை 4.30 மணி வரையும், 10ஆம் வகுப்புக்கு காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.45 மணி வரையும் நடத்தப்படது.

தேர்வுகள் முடிந்து 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 3ஆம் தேதி முதல் 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவம் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில் ஆசிரியர்கள் சங்கம் தரப்பில் காலாண்டு விடுமுறையை நீடிக்க கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அதன்படி வரும் அக்டோபர் 6 ஆம் தேதி வரை விடுமுறை நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது.

Latest News