5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Madurai Crime: சொந்த மகனை கிரைண்டர் கல்லால் கொலை செய்த தந்தை.. மது போதையில் நடந்த விபரீதம்..

மதுரை செல்லூர் அருகே உள்ள பெரியார் நகர் தெருவவைச் சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 62) . இவருக்கு ராமன் (வயது 30), லட்சுமணன் (வயது 28) என இரு மகன்கள் உள்ளனர். இதில் லட்சுமணன் மது பழக்கத்திற்கு அடிமையாகி உள்ள நிலையில் எந்த ஒரு வேலைக்கும் செல்லமால் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். குறிப்பாக லட்சுமணன் தினமும் இரவு மது அருந்திவிட்டு வீட்டில் வந்து அடிக்கடி தகராறு செய்த நிலையில் இதனை கண்டித்துள்ளனர்.

Madurai Crime: சொந்த மகனை கிரைண்டர் கல்லால் கொலை செய்த தந்தை.. மது போதையில் நடந்த விபரீதம்..
மகன் லட்சுமணன் – தந்தை வாசுதேவன்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 06 Nov 2024 18:46 PM

மதுரையில் மதுபோதையில் மகன் மீது கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்த தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை செல்லூர் அருகே உள்ள பெரியார் நகர் தெருவவைச் சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 62) . இவருக்கு ராமன் (வயது 30), லட்சுமணன் (வயது 28) என இரு மகன்கள் உள்ளனர். இதில் லட்சுமணன் மது பழக்கத்திற்கு அடிமையாகி உள்ள நிலையில் எந்த ஒரு வேலைக்கும் செல்லமால் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். குறிப்பாக லட்சுமணன் தினமும் இரவு மது அருந்திவிட்டு வீட்டில் வந்து அடிக்கடி தகராறு செய்த நிலையில் இதனை கண்டித்துள்ளனர். இதனிடையே நேற்று இரவு தந்தையும் மகன் லட்சுமணனும் மது வாங்கிவிட்டு வீட்டு மொட்டை மாடியில் ஒன்றாக மது அருந்தியதாக கூறப்படுகின்றது.

சொந்த மகனை கொலை செய்த தந்தை:

இந்த நிலையில் மது போதை அதிகமானதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் தந்தை வாசுதேவன் அருகில் இருந்த கிரைண்டர் கல்லை எடுத்து மகன் லட்சுமணன் தலையில் போட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே லட்சுமணன் உயிரிழந்துள்ளார்.

இதனிடையே வாசுதேவன் தானாகவே செல்லூர் காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில் அவரை கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Latest News