5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

”எந்த ஜென்ம பாவமோ தெரியல..” நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் விலகல்.. பரபர செய்தியாளர் சந்திப்பு!

இன்று செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணகிரி மண்டல நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கரு.பிரபாகரன் தலைமையிலான நிர்வாகிகள் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை வைத்துள்ளது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது,  “நாம் தமிழர் கட்சியில் யாரும் வளரக்கூடாது என சீமான் நினைக்கிறார். இதனால் அக்கட்சியில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்தார்.

”எந்த ஜென்ம பாவமோ தெரியல..”  நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் விலகல்.. பரபர செய்தியாளர் சந்திப்பு!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 01 Oct 2024 18:53 PM

சீமான் மீது குற்றச்சாட்டு: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் போர் கொடி தூக்கி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் 3வது பெரிய கட்சியாக இயக்குநர் சீமானின் நாம் தமிழர் கட்சி செயல்பட்டு வருகிறது. இதுவரை எந்த தேர்தலிலும் யாருடனும் கூட்டணி வைக்காத ஒரே கட்சி என்றால் அது நாம் தமிழர் கட்சி தான். அதுமட்டுமல்லாமல் மத்திய, மாநில அரசோ, எதிர்கட்சியோ யாரைப் பற்றியும் கவலைப்படாமல் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இதன் காரணமாக நாம் தமிழர் கட்சிக்கு ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு சதவிகிதம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அப்படியான நாம் தமிழர் கட்சியில் அவ்வப்போது பிரச்னைகளும் எழுவது வழக்கம். அந்த வகையில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: OnePlus 12 : ஒன்பிளஸ் 12-க்கு ரூ.9,000 வரை அதிரடி தள்ளுபடி.. விஜய் சேல்ஸின் சூப்பர் ஆஃபர்.. முழு விவரம் இதோ!

இன்று செய்தியாளர்களை சந்தித்த கிருஷ்ணகிரி மண்டல நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கரு.பிரபாகரன் தலைமையிலான நிர்வாகிகள் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை வைத்துள்ளது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது,  “நாம் தமிழர் கட்சியில் யாரும் வளரக்கூடாது என சீமான் நினைக்கிறார். இதனால் அக்கட்சியில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்தார். கட்சி ஆரம்பித்த போது இருந்த பல மாநில பொறுப்பாளர்கள் இப்போது கட்சியில் இல்லை என்றும், தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்த பிறகு நாம் தமிழர் கட்சியை தற்போதைய செயல்பாடுகள் சரியாக இல்லை என்றும் கரு. பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

 

மேலும், “கட்சியில் யாருக்கும் அங்கீகாரம் கிடைக்கக் கூடாது என உழைப்பவர்கள் அனைவரும் ஓரம் கட்டப்படுகிறார்கள். எந்த பொறுப்பாளரையும் அழைத்து சீமான் இதுவரை ஆலோசனை நடத்தவில்லை. அவர் பணத்திற்கு விலை போய்விட்டார் என நாங்கள் நினைக்கிறோம். மேலும் நாம் தமிழர் கட்சியின் செயற்குழு கூட்டம், பொதுக்குழு கூட்டம் என்பது  பெயரளவில் நடத்தப்பட்டு கையெழுத்து மட்டுமே வாங்கப்படுகிறது. கொள்கை ரீதியாக நிறைய நாம் தமிழர் கட்சி மாற்ற வேண்டும். தமிழர் தமிழர் என சீமான் சொல்கிறார். ஆனால் நான் சார்ந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கன்னடம் மொழியை தாய்மொழியாக கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தமிழ் மக்களுக்கு இணையாக அவர்களும் கட்சியில் உழைக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை எப்படி கைவிட முடியும். நாங்கள் அனைவரும் நிறைய இழந்து விட்டோம். கார்ப்பரேட் கம்பெனியில் கூலிக்கு வேலை செய்வது போல தான் 14 ஆண்டுகள் உழைத்தோம். யாராவது புகார் சொன்னால் திட்டுவதற்கு மட்டுமே போன் வரும். கட்சியின் வளர்ச்சி குறித்து கேட்க ஒருநாளும் போன் வந்ததில்லை.

இதையும் படிங்க: Edappadi Palanisamy: இபிஎஸ் மீது திடீரென பறந்து வந்து விழுந்த செல்போன்.. டென்ஷனான நிர்வாகிகள்!

மாதம் 2.5 லட்சம் மதிப்பிலான வாடகை வீடு,  மூன்று பேருக்கு 15  வேலை ஆட்கள், 5 கார்கள் என சீமான் சொகுசாக வாழ்கிறார். ஆனால் எங்கள் மண்டல செயலாளர் மனைவி ஏரி வேலைக்கு சென்று கொண்டிருக்கிறார். நீங்கள் தான் எளிமையான கட்சியா?. யாரை குறை சொல்கிறீர்கள். நாங்கள் எல்லாவற்றையும் இழந்து விட்டோம்.  நீங்கள் மறுபடியும் எங்களை கட்சியில் சேருங்கள்,  சேர்க்காவிட்டால் போங்கள். அது உங்களுடைய விருப்பம். எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ தெரியவில்லை. நாம் தமிழர் கட்சியில் இருந்து 14 வருடங்கள் வாழ்க்கையில் இழந்து விட்டோம். என்னுடன் இருக்கும் இந்த நிர்வாகிகளில் பலரும் கல்லூரி படிக்கும்போதே, படிப்பை முழுவதும் முடிக்காமல் கட்சியில் சேர வந்தவர்கள்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் ஒன்றை மட்டும் கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து உங்களுடைய இளமையை அழித்து விடாதீர்கள்.  15 ஆண்டுகளுக்கு போய்விட்டது. எந்த மாற்றமும் உண்டாகவில்லை. அடுத்ததாக கட்சியில் சேர்வது பற்றி நவம்பர் 27ஆம் தேதிக்குள் முடிவெடுப்போம்” என கரு.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

Latest News