5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Kallakurichi Hooch Tragedy: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்பு.. நடந்தது என்ன?

கள்ளக்குறிச்சி கருணாபுரம் கோமுகி அந்தப் பகுதியைச் சேர்ந்த 49 வயதான கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, மகன் தாமோதரன் ஆகியோர் சேர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்களிடம் நேற்று முன்தினம் பலர் கள்ளச்சாராயம் அருந்தியதில் அவர்களுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்தனர். தொடர்ந்து, நேற்று காலையும் பலர் கள்ளச்சாராயம் அருந்தி மயங்கிய நிலையில் இருந்தனர். அவர்களுக்கு நெஞ்சு எரிச்சல், வயிற்று வலி, கண் எரிச்சல் ஏற்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Kallakurichi Hooch Tragedy: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்பு.. நடந்தது என்ன?
கள்ளக்குறிச்சி
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 20 Jun 2024 12:42 PM

கள்ளச்சாராயம் உயிரிழப்பு: கள்ளக்குறிச்சி கருணாபுரம் கோமுகி அந்தப் பகுதியைச் சேர்ந்த 49 வயதான கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, மகன் தாமோதரன் ஆகியோர் சேர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்களிடம் நேற்று முன்தினம் பலர் கள்ளச்சாராயம் அருந்தியதில் அவர்களுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்தனர். தொடர்ந்து, நேற்று காலையும் பலர் கள்ளச்சாராயம் அருந்தி மயங்கிய நிலையில் இருந்தனர். அவர்களுக்கு நெஞ்சு எரிச்சல், வயிற்று வலி, கண் எரிச்சல் ஏற்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர்.  அதன்படி, தற்போது வரை 34 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Also Read: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்பு.. நேரலை தகவல்கள்!

இதில் 18 பேர் ஆம்புலஸ்கள் மூலமா புதுச்சேரி மருத்துவமனைக்கு உயர்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 6 பேருக்கு அவரச சிகிச்சை அளிப்பதற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 12 ஆம்புலன்ஸ்கள் மூலம் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

3 பேர் கைது:

கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் முருகன் (47), ராஜேந்திரன் மகன் சுரேஷ் (40), இவரது மனைவி வடிவுக்கரசி (32), சின்னு மகன் கந்தன் (47), பழனி மகன் ஜெகதீசன் (60), கணேசன் மகன் பிரவீன் (45), மண்ணாங்கட்டி மகன் சுரேஷ் (39), கணேசன் மகன் பிரவீன் (27), தருமன் மகன் சுரேஷ் (45), கண்ணன் மகன் சேகர் (65), முத்துசாமி மகன் ஆறுமுகம் (65), பச்சமுத்து மனைவி தனக்கொடி (60), சிறுவங்கூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் கண்ணன் (36) பெரியசாமி மகன் மணி (45) உள்ளிட்ட 32 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ரு.ஆனந்தன் வழக்குப்பதிவு செய்து, கள்ளச்சாராய வியாபாரிகள் கோவிந்தராஜ் அவரது மனைவி விஜயா, மகன் தாமோதரன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நடவடிக்கை:

சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த சம்பவத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், காவல் கண்காணிப்பாளர் உள்பட 10 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத் உடனடியாகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருடன் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எடிஸ்பி தமிழ்செல்வன், திருக்கோவிலூர் டிஎஸ்பி மனோஜ், கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர்கள் கவிதா, பாண்டிசெல்வி, ஆனந்தன், திருக்கோவிலூர் சார் ஆய்வாளர்கள் பாரதி, ஷிவ்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் ஒட்டு மொத்தமாக மாற்றப்பட்ட நிலையில் புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த், புதிய காவல் கண்காணிப்பாளராக ரஜத் சதர்வேதி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Also Read: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 31ஆக அதிகரிப்பு.. தமிழ்நாட்டில் பதற்றம்!

Latest News