5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cyclone Fengal: 12 மணி நேரத்தில் வலுப்பெறும் புயல்.. எப்போதும் கரையைக் கடக்கும்?

கடந்த நவம்பர் 24 ஆம் தேதி வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. 25 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகவும், அதனைத் தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் ஆகவும் இது உருமாறியது.

Cyclone Fengal: 12 மணி நேரத்தில் வலுப்பெறும் புயல்.. எப்போதும் கரையைக் கடக்கும்?
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 29 Nov 2024 15:26 PM

ஃபெங்கால் புயல்: தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாழ்வு மண்டலமானது தற்போது சென்னைக்கு தென்கிழக்கு திசையில் சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து அடுத்த 3 மணி நேரத்தில் ஃபெங்கால் புயலாக உருவாகக்கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் – புதுச்சேரி கடற்கரை பகுதியில் காரைக்கால் – மகாபலிபுரம் இடையே நாளை மதியம் புயலாக கரையை  கடக்கக் கூடும். அப்போது மணிக்கு 70-80 கிலோமீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 90 கிலோமீட்டர் வேகத்திலும் தமிழகத்திலும் காற்று வீசப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: நெருங்கும் புயல்… சென்னைக்கு அதி கனமழை அலர்ட்… வெதர்மேன் முக்கிய தகவல்!

கடந்த நவம்பர் 24 ஆம் தேதி வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. 25 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகவும், அதனைத் தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் ஆகவும் இது உருமாறியது. இது முதலில் மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை அருகே கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று காலை 5.30 மணியளவில் 7 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து திரிகோணமலைக்கு 310 கிலோமீட்டர் தொலைவிலும் நாகப்பட்டினம் புதுச்சேரிக்கு கிழக்கு தென்கிழக்கு திசையில் 360 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னைக்கு தென்கிழக்கில் 400 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர பிரதேச கடற்கரைகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று இரவு புயல் உருவாகாது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது புயல் உருவாகும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே அதன் தீவிரத்தை தக்க வைத்து கடக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொடர்ச்சியாக அதன் நகர்வு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது புயல் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: Mosambi: குளிர்காலத்தில் சாத்துக்குடி ஜூஸ்.. சளியை விடுங்க.. இத்தனை நன்மைகள் இருக்கு!

இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், அரியலூர், திருவாரூர்,தஞ்சாவூரில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி,புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இன்று கன மழைக்கான வாய்ப்பு என கணிக்கப்பட்டுள்ளது.

நாளை (நவம்பர் 30ம் தேதி) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில்   அதிக கன மழை காண ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

Latest News