கரையை கடக்கத் தொடங்கிய ஃபெங்கல் புயல்.. இயல்பு நிலைக்கு திரும்புமா சென்னை?
Cyclone Fengal : வங்கக் கடல் அருகே நிலவி வந்த ஃபெங்கல் புயல் கரையை கடக்கத் தொடங்கியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மாலை 5.30 மணிக்கே கரையை கடக்கத் தொடங்கியதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை தொட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடல் அருகே நிலவி வந்த ஃபெங்கல் புயல் கரையை கடக்கத் தொடங்கியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மாலை 5.30 மணிக்கே கரையை கடக்கத் தொடங்கியதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஃபெங்கல் புயலின் முன்பகுதி கரையை தொட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் இன்று இரவுக்குள் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி அருகே கரையை கடக்கக் கூடும். தற்போது புதுச்சேரியில் இருந்து 60 கி.மீ தொலைவிலும், மாமல்லபுரத்தில் இருந்து 50 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 90 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டிருக்கிறது.
கரையை கடக்கத் தொடங்கிய ஃபெங்கல் புயல்
தற்போது கரையை கடக்கத் தொடங்கிய ஃபெங்கல் புயல், அடுத்த 3 முதல் 4 மணி நேரத்தில் முழுவதுமாக கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் ஃபெங்கல் புயல் கரையை கடக்கக் கூடும். கரையை முழுவதுமாக கடக்கும்போது 90 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரை காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கடக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Cyclone Fengal Landfall
Hourly update 1900 IST
Movement speed : 7kmph
60 km east-northeast of Puduchery.
Forward sector of spiral bands entered land
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 30, 2024
இரண்டு நாட்களாக போக்கு காட்டி வந்த ஃபெங்கல் புயல் தற்போது கரையை கடக்கத் தொடங்கியது. இதனால், சென்னை முதல் புதுச்சேரி வரை கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. அதுமட்டுமில்லால் ஆங்காங்கே கனமழையும் பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் நேற்று இரவு முதலே பலத்த மழை பெய்து வருகிறது.
அதிக காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மட்டுமில்லாமல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
Also Read : ஃபெங்கல் புயல்.. 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம்.. எப்போது தெரியுமா?
சென்னையில் தொடரும் கனமழை
குறிப்பாக, சென்னையில் தற்போது வரை பலத்த காற்றடன் மழை பெய்து வருகிறது. இதனால் இதனால் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. எனவே, இந்த மழை நாளை வரை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
Also Read : வெள்ளக்காடாக மாறிய சென்னை.. பரிதவிக்கும் மக்கள்.. தீர்வு எப்போது?
வரும் 2 ஆம் தேதி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 3 ஆம் தேதி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.