5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Fengal cyclone: அடுத்த 3 மணி நேரத்தில் கரையை கடக்கும் ஃபெங்கல் புயல்

Tamil Nadu Rains : சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது,

Fengal cyclone: அடுத்த 3 மணி நேரத்தில் கரையை கடக்கும் ஃபெங்கல் புயல்
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Updated On: 30 Nov 2024 22:05 PM

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் “ஃபெஞ்சல்” என்ற சூறாவளி புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 07 கி.மீ வேகத்தில் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று, அதிகாலை 2.30 மணி நிலவரப்படி, 11.9°N மற்றும் தீர்க்கரேகை 81.5°E, சுமார் 370 கி.மீ திருகோணமலைக்கு வடக்கே, நாகப்பட்டினத்திலிருந்து வடகிழக்கே 210 கி.மீ., புதுச்சேரிக்கு கிழக்கே 180 கி.மீ., சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இது நவம்பர் 30-ம் தேதி பிற்பகலில் மணிக்கு 70 – 80 கி.மீ வேகத்தில் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும், இது கிட்டத்தட்ட மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு – புதுச்சேரி கடற்கரையை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்று 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

 

Latest News