5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Ex Minister : முன்னாள் அமைச்சர் சுந்தரம் காலமானார்.. முதலமைச்சர் நேரில் அஞ்சலி!

Minister Passed Away | திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் க.சுந்தரம். இவர் கடந்த பல ஆண்டுகளாக திமுகவில் முக்கிய நபராக இருந்து வந்துள்ளார். அதாவது கடந்த 1989 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

Ex Minister : முன்னாள் அமைச்சர் சுந்தரம் காலமானார்.. முதலமைச்சர் நேரில் அஞ்சலி!
முன்னாள் அமைச்சரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதலமைச்சர்
vinalin
Vinalin Sweety | Updated On: 18 Sep 2024 22:56 PM

திமுகவின் முன்னாள் அமைச்சரும், திமுகவின் முன்னாள் துணை பொதுச் செயலாளருமான க.சுந்தரம் உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 71. உடல்நலக் குறைவால் உயிரிழந்த அமைச்சரின் உடல், அவரது சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் திடீர் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : பாடம் நடத்திக் கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து உயிரிழந்த ஆசிரியர்.. அதிர்ச்சி சம்பவம்!

முன்னாள் அமைச்சர் சுந்தரத்தின் அரசியல் பயணம்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் க.சுந்தரம். இவர் கடந்த பல ஆண்டுகளாக திமுகவில் முக்கிய நபராக இருந்து வந்துள்ளார். அதாவது கடந்த 1989 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை ஆதி திராவிடர் நலத்துரை அமைச்சராகவும், கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை பால்வளத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். அதன்படி, 1989 முதல் 2000 ஆம் ஆண்டு வரை தமிழக அரசியலில் முக்கிய நபராக இருந்துள்ளார்.

இதையும் படிங்க : IND vs BAN 1st test Live Streaming: இந்தியா – வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்.. போட்டியை எப்போது, எங்கு காணலாம்..?

அமைச்சரின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

சுந்தரம் அமைச்சராக பதவி வகித்தது மட்டுமன்றி, திமுகவின் துணை பொதுச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். இதேபோல ஆதிதிராவிட நலக்குழு தலைவராகவு பதவி வகித்துள்ளார். இத்தகைய முக்கிய பதவிகள் வகுத்து முக்கிய தலைவராக இருந்த க.சுந்தரம் இன்று உடல்நலக் குறைவால் காலமானார், அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.

இதையும் படிங்க : One Nation One Election : ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்.. ஒப்புதல் வழங்கிய மத்திய அமைச்சரவை!

முன்னாள் அமைச்சர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதலமைச்சர்

இதனை தொடர்ந்து மறைந்த முன்னாள் அமைச்சர் க.சுந்தரத்தின் உடல் வைக்கப்பட்டுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார்.

மறைந்த முன்னாள் அமைச்சர் க.சுந்தரத்தின் இறுதி சடங்கு நாளை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News