5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Evening Digest 09 November 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?

இன்றைய (நவ.9, 2024) முக்கியச் செய்திகள்: உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். இந்தத் தொகுப்பு ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Evening Digest 09 November 2024: இன்றைய டாப் செய்திகள்… உள்ளூர் முதல் உலகம் வரை நடந்தது என்ன?
டாப் செய்திகள்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 18 Nov 2024 15:13 PM

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தானில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி காட்டும் அரசியல் புத்தகம் போலியானது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். இனி வரும் நாட்களில் புயல்கள் வலிமையானதாக இருக்கும் என்று மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு

  • இனி வரும் நாட்களில் புயல்கள் வலிமையானதாக இருக்கும் என்று மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றம் பெரும் சவாலமாக இருக்கும் நிலையில், இனி வரும் நாட்களில் புயல்கள் வலிமையானதாக இருக்கும் மத்திய அரசு கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரிவாக படிக்க
  • வங்கக் கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அது தமிழகத்தை நோக்கி வரும் என்றும் அதன் பிறகு வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. விரிவாக படிக்க
  • சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படத்திற்கு பாஜகவை சேர்ந்த வானதி ஸ்ரீனிவாசன் கடுமையாக விமர்சித்து கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிக்க துடிக்கும் பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகளை போற்றுபவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். விரிவாக படிக்க 
  • சென்னைக்கு வரும் 12ஆம் தேதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மழை நீர் தேங்காமல் இருக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
  • சென்னை போதைப் பொருளுடன் துணை நடிகை மீனா கைது செய்யப்பட்டுள்ளார். இவர் டெடி உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகையாகவும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
  • 2 நாள் சுற்றுப்பயணமாக விருதுநகர் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்குள்ள பட்டாசு தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.

இந்தியா

  • நிதி முறைகேடு புகார் தொடர்பாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது வழக்குப்பதிவு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி குன்ஹா தலைமையிலான ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
  • ஏழைகளிடம் பணம் பறிக்கும் வகையில் வரி அமைப்பு முறையை மாற்றியுள்ளதாக மத்திய அரசை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
  • தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி காட்டும் அரசியல் புத்தகம் போலியானது என்றும் இடஒதுக்கீட்டை பறிக்கும் கெட்ட நோக்கம் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
  • மேற்கு வங்க மாநிலத்தில் விரைவு ரயிலின் 3 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
  • மருமகளை டிவி பார்க்க விடாததும், அக்கம் பக்கத்தினரை சந்திக்கவும், கோயிலுக்கு செல்லவதை அனுமதிக்காததும் கொடுமை அல்ல என்று மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தற்கொலை வழக்கில் மும்பை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விரிவாக படிக்க

உலகம்

  • பாகிஸ்தானில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர குண்டுவெடிப்பில் 20 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். விரிவாக படிக்க
  • கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பலர் உள்ளதாகவும், அவர்கள் ஓட்டுமொத்த சீக்கிய சமூகத்தின் பிரநிதிகள் அல்ல என்றும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
  • ஸ்பெயினில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

விளையாட்டு

  • ஆப்கானிஸ்தான் – வங்க தேசம் அணிகள் இடையிலான 2வது போட்டி ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
  • இந்தியா டி20 கிரிக்கெட் வரலாற்றில் ரோகித் சர்மாவின் மாபெரும் சாதனையை சஞ்சு சாம்சன் சமன் செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற ரோகித் சர்மாவின் மாபெரும் சாதனையை சமன் செய்தார்.

இன்று காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய செய்திகள், உள்ளூர் முதல் உலகம் வரை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

Latest News